சாமுவேல் முத்துசாமி

 
விளையாட்டு

காங்கோ அணிக்காக விளையாடிய தமிழ் வம்சாவளி வீரர் சாமுவேல் முத்துசாமி | FIFA WC 2026

வேட்டையன்

டெக்சாஸ்: நடப்பு ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் காங்கோ அணிக்காக ஸ்டார்டிங் லெவனில் களம் கண்டிருந்தார் தமிழ் வம்சாவளி வீரரான சாமுவேல் முத்துசாமி.

அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள ஹியூஸ்டனில் ‘கே’ பிரிவில் உள்ள போர்ச்சுகல் மற்றும் காங்கோ அணிகள் இந்த தொடரில் இந்திய நேரப்படி நேற்று இரவு 10.30 மணிக்கு விளையாடின.

இந்த ஆட்டத்தில் போர்ச்சுகல் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த தொடரில் சாம்பியன் படம் வெல்லும் வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக போர்ச்சுகல் இருப்பதாக கால்பந்து ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

இந்த ஆட்டத்தின் ஆறாவது நிமிடத்தில் ஜோவா நெவாஸ், போர்ச்சுகல் அணிக்காக முதல் கோலை பதிவு செய்தார். அதற்கான பதில் கோலை முதல் பாதியின் ஸ்டாப்பேஜ் டைமில் காங்கோ அணி பதிவு செய்தது. காங்கோ அணிக்காக விஸ்ஸா அந்த அற்புதத்தை நிகழ்த்தினார்.

யார் இந்த சாமுவேல் முத்துசாமி?

காங்கோ அணிக்காக இந்த ஆட்டத்தின் ஸ்டார்டிங் லெவனில் தமிழ் வம்சாவளியை சேர்ந்த சாமுவேல் முத்துசாமி விளையாடினார்.

29 வயதான நடுகள வீரரான சாமுவேல் முத்துசாமி பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் பிறந்தவர். இவரது தாய் காங்கோ நாட்டைச் சேர்ந்தவர். தந்தை கரீபியன் தீவுகளில் ஒன்றான குவாதலூப்பைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழ் வம்சாவளி ஆவார். 19-ம் நூற்றாண்டில் தமிழகத்தில் இருந்து குவாதலூப்புக்கு இவரது முன்னோர்கள் குடிபெயர்ந்துள்ளனர்.

கடந்த 2019 முதல் காங்கோ அணிக்காக சர்வதேச அளவிலான கால்பந்து ஆட்டங்களில் விளையாடி வருகிறார். சுமார் 50-க்கும் மேற்பட்ட ஆட்டங்களில் விளையாடிய அனுபவம் கொண்டவர்.

கடைசியாக காங்கோ அணி கடந்த 1974 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்று இருந்தது. அதுதான் அந்த அணியின் முதல் உலகக் கோப்பை தொடர். அதன் பின்னர் சுமார் அரை நூற்றாண்டு காலம் கடந்து நடப்பு உலகக் கோப்பை தொடரில் காங்கோ பங்கேற்றுள்ளது. அதோடு உலகக் கோப்பை வரலாற்றில் காங்கோ அணி முதல் கோலையும் பதிவு செய்தது. அந்த அணியின் வரலாற்று சிறப்புமிக்க இந்த ஆட்டத்தில் சாமுவேல் முத்துசாமி விளையாடினார். இந்த ஆட்டத்தில் அவருக்கு 5.5 ரேட்டிங் கொடுக்கப்பட்டது.

SCROLL FOR NEXT