தன்வி சர்மா
தைபே சிட்டி: தைபே ஓபன் சூப்பர் 300 பாட்மிண்டன் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றுக்கு இந்திய வீராங்கனை தன்வி சர்மா முன்னேறியுள்ளார்.
இந்தப் போட்டி தைபே நாட்டிலுள்ள தைபே சிட்டியில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் அரை இறுதிப் போட்டியில் தன்வி சர்மாவும், சீன தைபே வீராங்கனை யூ ஹுசுனும் மோதினர்.
இதில் தன்வி சர்மா 21-17, 21-11 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு அரை இறுதியில் இந்திய வீராங்கனை உன்னதி ஹூடா 15-21, 18-21 என்ற செட் கணக்கில் உலகத் தரவரிசையில் 21-வது இடத்தில் இருக்கும் வியட்நாம் வீராங்கனை துய் லின் குயேனிடம் வீழ்ந்து வெளியேறினார்.