விளையாட்டு

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்: மேட் ஹென்றி, பெர்குசன் விலகல்

செய்திப்பிரிவு

வெலிங்டன்: இந்தியாவுக்கு எதிரான சர்வதேச டி20 தொடரிலிருந்து நியூஸிலாந்து வீரர் மேட் ஹென்றி, லாக்கி பெர்குசன் ஆகியோர் விலகியுள்ளனர்.

நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து இந்திய கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது. டி20 தொடரில் முதல் 2 போட்டிகளில் பங்கேற்ற மேட் ஹென்றி எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். அதேநேரத்தில் லாக்கி பெர்குசன் 3-வது போட்டியில் மட்டும் விளையாட மாட்டார் என்றும், 4, 5-வது போட்டியில் நியூஸிலாந்து அணியுடன் மீண்டும் இணைந்து கொள்வார் என்றும் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT