விளையாட்டு

ஜிம்பாப்வே அணியுடன் டி20-ல் இன்று மோதல்: ஸ்ரேயஸ் ஐயருக்கு முதல் வெற்றி கிடைக்குமா?

செய்திப்பிரிவு

ஹராரே: ஸ்யேரஸ் ஐயர் தலை​மையி​லான இந்திய அணி 3 டி20 கிரிக்​கெட் ஆட்​டங்​கள் கொண்ட தொடரில் விளை​யாடு​வதற்​காக ஜிம்பாப்வே சென்​றுள்​ளது. இந்​தத் தொடரின் முதல் ஆட்​டம் இன்று மாலை 4.30 மணிக்கு ஹராரே​வில் நடை​பெறுகிறது.

ஸ்ரேயஸ் ஐயர் கேப்​ட​னாக பொறுப்​பேற்​ற​தில் இருந்து இந்​திய அணி இது​வரை ஒரு டி 20 ஆட்​டத்​தில் கூட வெற்றி பெற​வில்​லை. சமீபத்​தில் அயர்​லாந்​துக்கு எதி​ராக நடை​பெற்ற டி 20 தொடரை 0-2 என்ற கணக்​கிலும், இங்​கிலாந்​துக்கு எதி​ரான டி 20 தொடரை 0-4 என்ற கணக்​கிலும் இந்​திய அணி இழந்​திருந்​தது. இந்த சூழ்​நிலை​யில்​தான் ஜிம்​பாப்வே அணிக்கு எதி​ரான இருதரப்பு டி 20 தொடரை சந்​திக்​கிறது இந்​திய அணி. இந்த தொடரின் முடிவு இந்​திய அணிக்கு சாதக​மாக இருக்​கக்​ கூடும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது..

சஞ்சு சாம்​சன் இந்த தொடருக்கு தேர்வு செய்​யப்​ப​டாத​தால் சூர்​ய​வன்ஷி அனைத்து ஆட்​டங்​களி​லும் அபிஷேக் சர்​மாவுடன் களமிறங்​கு​வார். இன்​றைய போட்டி நடை​பெறும் ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானம், அபிஷேக் சர்​மா, சூரிய​வன்ஷி ஆகிய இரு​வருக்​குமே ராசி​யானது. அபிஷேக் சர்மா இந்த மைதானத்​தில்தான் டி 20 போட்​டி​யில் அறி​முக​மாகி இருந்​தார். அப்​போது நடை​பெற்ற தொடரின் 2-வது ஆட்​டத்​தில் அபிஷேக் சர்மா சதம் விளாசி​யிருந்​தார்.

சூர்ய​வன்​ஷியைப் பொறுத்​தவரை, இந்த ஆண்​டின் தொடக்​கத்​தில் இளை​யோர் உலகக் கோப்பை இறு​திப்​போட்​டி​யில் இங்​கிலாந்து யு-19 அணிக்கு எதி​ராக சதத்​தை விளாசி​யிருந்​தார். இதனால் இவர்​களிடம் இருந்து சிறந்த மட்டை வீச்சு வெளிப்​படக்​கூடும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. ஸ்ரேயஸ் ஐயர், இஷான் கிஷன், திலக் வர்​மா, ரிங்கு சிங், ஷிவம் துபே ஆகியோ​ரும் பொறுப்​புடன் செயல்பட வேண்​டிய கட்​டத்​தில் உள்​ளனர்.

இது ஒரு​புறம் இருக்க ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்​தின் ஆடு​களத்​தில் பிற்​பகலில் நடை​பெறும் போட்​டிகளில் பந்​துகள் வேக​மாக எகிறி வரும். இதனால், கால்​களின் நகர்​வு​களை பயன்படுத்தி விளை​யா​டாத இந்​திய பேட்​ஸ்​மேன்​கள் கடும் சவால்​களை சந்​திக்க நேரிடும். இந்த வகை​யில், ஜிம்​பாப்வே அணி​யின் வேகப்​பந்து வீச்​சாளர்​களான பிளெஸ்​ஸிங் முசர​பானி, ரிச்​சர்ட் நகரவா ஆகியோர் தொடக்க ஓவர்​களில் அழுத்​தம் கொடுக்க வாய்ப்பு உள்​ளது.

இந்​திய அணி​யின் பந்​து​வீச்சு துறை மயங்க் யாதவ், அசோக் சர்மா, பிரின்ஸ் யாதவ், யாஷ் தாக்​கூர் ஆகிய இளம் வேகப்​பந்து வீச்​சாளர்​களை நம்பி களமிறங்​கு​கிறது. சுழற்​பந்து வீச்சாளராக ரவி பிஷ்னோய் களமிறங்​கக்​கூடும்.

SCROLL FOR NEXT