விளையாட்டு

சையது மோடி சர்வதேச பாட்மிண்டன் தொடர்: அரை இறுதியில் ட்ரீசா - காயத்ரி ஜோடி

செய்திப்பிரிவு

லக்னோ: சையது மோடி சர்வதேச பாட்மிண்டன் தொடர் லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் இரட்டையர் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் ட்ரீசா ஜாலி, காயத்ரி கோபிசந்த் ஜோடியானது பிரான்ஸின் மார்கோ லம்பேர்ட், கமில் பொக்னான்ட் ஜோடியை எதிர்த்து விளையாடுவதாக இருந்தது.

ஆனால் கடைசி நேரத்தில் காயம் காரணமாக பிரான்ஸ் ஜோடி விலகியது. இதனால் ட்ரீசா-காயத்ரி ஜோடி அரை இறுதிக்கு முன்னேறியது.

மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் தன்வி சர்மா 21-19, 18-21, 21-14 என்ற செட் கணக்கில் இந்தோனேஷியாவின் நி கோடெக் திண்டா அமர்த்தியா பிரதிபியை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார். அரை இறுதி சுற்றில் தன்வி சர்மா, சகநாட்டைச் சேர்ந்த உன்னதி ஹூடாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT