நெய்​மர்

 
விளையாட்டு

பிரேசில் கால்​பந்து வீரர் நெய்​மருக்கு அறுவை சிகிச்சை

செய்திப்பிரிவு

சாவோ பாலோ: பிரேசில் கால்​பந்து நட்​சத்​திர​மான நெய்​மருக்கு இடது முழங்​காலில் அறுவை சிகிச்சை மேற்​கொள்​ளப்​பட்​டுளள​தாக சான்​டோஸ் கிளப் தெரி​வித்​துள்​ளது.

33 வயதான நெய்​மர், இடது முழங்​காலில் ஏற்​பட்ட காயம் காரண​மாக அவதிப்​பட்டு வந்​தார். இந்த ஆண்டு பல்​வேறு போட்​டிகளில் அவர், பங்​கேற்​க​வில்​லை. பல போட்​டிகளில் இருந்து தன்னை ஒதுக்கி வைத்து வலிகளை சரிசெய்ய விரும்​புவ​தாக நெய்​மர் சமீபத்​தில் கூறி​யிருந்​தார். இந்​நிலை​யில் பிரேசில் அணி​யுடன் பணி​யாற்​றும் மருத்​து​வ​ரான ரோட்​ரிகோ லஸ்​மர், நெய்​மரின் காயத்​துக்கு வெற்​றிகர​மாக அறுவை சிகிச்சை செய்​துள்​ளார்.

கடந்த வார இறு​தி​யில், சாவோ பாலோ​வில் நடை​பெற்ற இசை நிகழ்ச்​சி​யில் பங்​கேற்ற நெய்​மர், உலகக் கோப்​பை​யில் விளை​யாட​வும், இறு​திப் போட்​டி​யில் கோல் அடிக்​க​வும் தான் இன்​னும் நம்​பிக்​கை​யுடன் இருப்​ப​தாக கூறி​யிருந்​தார். எனினும் கடந்த மே மாதம் நியமிக்​கப்​பட்ட பிரேசில் பயிற்​சி​யாளர் கார்லோ அன்செலோட்​டி, இன்​னும் நெய்​மரை தேசிய அணிக்கு தேர்வு செய்​ய​வில்​லை.

கடந்த ஜனவரி மாதம் சிறு​வயது கிளப்​பான சாண்​டோஸுக்​குத் திரும்​பிய அவர், ஏப்​ரல் மாதம் தொடங்​கிய பிரேசிலின் சீரிஸ் ஏ தொடரில் 38 ஆட்​டங்​களில் 19-ல் மட்​டுமே விளை​யாடி​னார். அவர், 8 கோல்​களை அடித்​திருந்​தார். இறுதி கட்ட சுற்​றுகளில் நெய்​மர் அடித்த கோல்​கள் சாண்​டோஸை தொடரில் இருந்து வெளியேற்றுவதைத் தவிர்க்க உதவியது.

SCROLL FOR NEXT