விளையாட்டு

சிஎஸ்கே நிகழ்வில் சுரேஷ் ரெய்னா, மேத்யூ ஹேடனுக்கு கவுரவம்!

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை சூப்​பர் கிங்​ஸ்​ (சிஎஸ்​கே) அணி​யின் முன்னாள் வீரர்​கள் சுரேஷ் ரெய்னா, மேத்யூ ஹேடன் ஆகியோ​ருக்கு `ஹால் ஆஃப் ஃபேம்’ கவுர​வம் வழங்​கப்​பட்​டது.சென்னை சேப்​பாக்​கம் மைதானத்​தில் சிஎஸ்கே அணி நிர்​வாகம் சார்பில் நேற்று `ரோர் 26' நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்​சி​யில் ஏ.ஆர்​.ரஹ்​மானின் இசை நிகழ்ச்சி நடை​பெற்​றது. முன்​ன​தாக சிறப்பு விருந்​தின​ராக கலந்​து​கொண்ட நடிகர் சிவ​கார்த்​தி​கேயன் சிஎஸ்கே வீரர்​களைப் பாராட்​டிப் பேசி​னார். இதைத் தொடர்ந்து நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் அணி​யின் முன்​னாள் வீரர்​கள் சுரேஷ் ரெய்​னா, மேத்யூ ஹேடன் ஆகியோ​ருக்கு `ஹால் ஆஃப் ஃபேம்’ கவுர​வத்தை சிஎஸ்கே அணி நிர்​வாகம் வழங்​கியது.

          

சிஎஸ்கே அணி நிர்​வாகம் சார்​பில் முதன்​முறை​யாக `ஹால் ஆஃப் ஃபேம்’ எனப்​படும் வீரர்​களுக்கு உரிய கவுர​வம் அளிப்​பது தொடங்​கப்​பட்​டுள்​ளது. சிறப்​பாக விளை​யாடும் வீரர்​களை `ஹால் ஆஃப் ஃபேம்’ எனப்​படும் கவுர​வம் அளித்து பாராட்​டு​வது கிரிக்​கெட்​டில் மரபாக கடைப்​பிடிக்​கப்​பட்டு வரு​வது குறிப்​பிடத்​தக்​கது. சிஎஸ்கே அணி இது​வரை 5 முறை ஐபிஎல் கோப்​பையை வென்​றுள்​ளது.

2010, 2011, 2018, 2021-ம் ஆண்​டு​களில் அணி கோப்​பையை வென்​ற​போது அதில் இடம்​பிடித்​திருந்​தவர் சுரேஷ் ரெய்னா. சுரேஷ் ரெய்னா 2008-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை சிஎஸ்கே அணிக்​காக விளை​யாடி​னார். மேலும் சிஎஸ்கே அணி, 2010, 2014-ம் ஆண்​டு​களில் சாம்​பியன்ஸ் லீக் டி20 போட்​டி​யில் பட்​டம் வென்​ற​போதும் அந்த அணி​யில் இடம்​பிடித்​தவர் சுரேஷ் ரெய்னா என்​பது குறிப்பிடத்​தக்​கது. அதே​போல், மேத்யூ ஹேடன் 2008-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை சிஎஸ்கே அணிக்​காக விளை​யாடி​னார். 2010-ல் சிஎஸ்கே கோப்​பையை வென்​ற​போது அவர் அணி​யில் இடம்​பிடித்​திருந்​தார்​ ஹேடன்​.

SCROLL FOR NEXT