விளையாட்டு

டெல்லி அணியில் இணைகிறார் ஸ்டார்க்

செய்திப்பிரிவு

சிட்னி: ஆஸ்​திரேலிய அணி​யின் இடதுகை வேகப்​பந்து வீச்​சாள​ரான மிட்செல் ஸ்டார்க் ஆஷஸ் டெஸ்ட் தொடர், பிக்​பாஷ் டி 20 லீக்​கில் தீவிர​மாக விளை​யாடியதைத் தொடர்ந்து முழங்கை மற்​றும் தோள்​பட்டை பகு​தி​யில் காயம் அடைந்​தார். இதன் காரண​மாக அவரால், நடப்பு ஐபிஎல் தொடரின் தொடக்க ஆட்​டங்​களில் விளை​யாட முடி​யாமல் போனது.

தற்​போது மிட்​செல் ஸ்டார்க் காயத்​தில் இருந்து குணமடைந்​துள்​ளதை தொடர்ந்து ஐபிஎல் தொடரில் விளை​யாட ஆஸ்​திரேலிய கிரிக்​கெட் வாரி​யம் அனு​மதி அளித்​துள்​ளது. 36 வயதான மிட்​செல் ஸ்டார்க் கடந்த சீசனில் அவர், 11 ஆட்​டங்​களில் விளை​யாடி 14 விக்கெட்களை வீழ்த்​தி​யிருந்​தார்.

நடப்பு சீசனில் டெல்லி அணி 6 ஆட்​டங்​களில் விளை​யாடி 3 வெற்​றி, 3 தோல்வி​களு​டன் 6 புள்​ளி​களை பெற்​றுள்​ளது. டெல்லி அணி​யுடன் இன்று இணை​யும் மிட்​செல் ஸ்டார்க் அந்த அணி​யின் மருத்​து​வக் குழு​வின் கண்​காணிப்​பில் ஒரு வாரம் பந்​து​வீச்சு பயிற்​சியை மேற்​கொள்​வார். வரும் மே 1-ம் தேதி ராஜஸ்​தான் ராயல்ஸ் அணிக்கு எதி​ரான போட்​டி​யில் மிட்​செல் ஸ்டார்க் களமிறங்​கு​வார் என எதிர்​பார்க்​கப்​படுகிறது.

SCROLL FOR NEXT