விளையாட்டு

ஏசிசி ரைசிங் ஸ்​டார் தொடர்: அரை இறுதியில் இந்​தியா ‘ஏ’ அணியை வீழ்த்தியது இலங்கை ‘ஏ’

செய்திப்பிரிவு

தோஹா: ஏசிசி ஆட​வர் ஆசி​யக் கோப்பை ரைசிங் ஸ்​டார் கிரிக்​கெட் போட்​டி​யின் அரை இறுதி​யில் இலங்கை ‘ஏ’ அணிக்​கெதிராக இந்​தியா ‘ஏ’ அணி 317 ரன்​கள் குவித்​தது.

கத்​தா​ரின் தோஹா நகரில் இப்​போட்​டிகள் நடை​பெற்று வரு​கின்​றன. நேற்று நடை​பெற்ற முதல் அரை இறுதி​யில் இந்​தியா ‘ஏ’, இலங்கை ‘ஏ’ அணிகள் மோதின. முதலில் விளை​யாடிய இந்​தியா ‘ஏ’ அணி 50 ஓவர்​களில் 8 விக்​கெட்​கள் இழப்​புக்கு 317 ரன்​கள் குவித்​தது.

வைபவ் சூர்​ய​வன்ஷி 40, அபிஷேக் சர்மா 78, திலக் வர்மா 53, குமார் குஷாக்ரா 21, ரிங்கு சிங் 12, சூர்​யான்ஷ் ஷெட்கே 10, தனுஷ் கோட்​டி​யான் 28, ஷாபாஸ் அகமது 54, ஹர்ஷ் துபே 8 ரன்​கள் சேர்த்தனர். பின்​னர் 318 ரன்​கள் எடுத்​தால் வெற்றி என்ற இலக்​குடன் இலங்கை ‘ஏ’ அணி பேட்​டிங் செய்​யத் தொடங்​கியது.

அந்த அணி 41.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 318 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான லசித் மற்றும் ஸினத் ஜெயவர்த்தனே ஆகியோர் சதம் விளாசினார். நிஷான் மதுஷ்கா 58 ரன்களும், கேப்டன் பவன் 31 ரன்களும் எடுத்திருந்தனர். இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT