அனாஹத் சிங்

 
விளையாட்டு

ஃபயர் ஓபன் ஸ்கு​வாஷ்: அரை இறு​தி​யில் அனாஹத் சிங்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஃபயர் ஓபன் ஸ்கு​வாஷ் போட்​டி​யின் மகளிர் ஒற்​றையர் பிரிவு அரை இறு​திச் சுற்​றுக்கு இந்​திய வீராங்​கனை அனாஹத் சிங் முன்​னேறி​யுள்​ளார்.

ஃபயர் ஓபன் ஸ்கு​வாஷ் போட்டி அமெரிக்​கா​வின் வாஷிங்​டனில் நடை​பெற்று வரு​கிறது. இந்​நிலை​யில் நேற்று நடை​பெற்ற கால் இறு​திப் போட்​டி​யில் அனஹத் சிங்​கும், எகிப்து வீராங்​கனை சானா இப்​ராஹி​மும் மோதினர்.

          

இதில் அனஹத் சிங் 8-11 8-11 11-7 11-8 11-7 என்ற புள்​ளி​கள் கணக்​கில் சானா இப்​ராஹிமை வீழ்த்தி அரை இறு​திச் சுற்​றுக்கு முன்​னேறி​னார். அரை இறு​திச் சுற்​றில், அமெரிக்க வீராங்​கனை சப்​ரினா சோபியை எதிர்த்து விளை​யாட​வுள்​ளார் அனஹத் சிங்.

அதே​நேரத்​தில் ஆடவர் ஒற்​றையர் கால் இறு​திச் சுற்​றில் இந்​திய வீரர் வீர் சோட்​ராணி தோல்வி கண்டு வெளி​யேறி​னார். கால் இறு​தி​யில் இங்​கிலாந்து வீரர் டெக்​லான் ஜேம்ஸ் 8-11 11-6 14-12 11-9 என்று புள்​ளி​கள் கணக்​கில் வீர் சோட்​ராணியை வென்​றார்.

SCROLL FOR NEXT