இந்திய கிரிக்கெட் அணி வீராங்கனைகள்

 
விளையாட்டு

மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் அரையிறுதி முதல் ஜூனியர் ஹாக்கி வரை | ஸ்போர்ட்ஸ் ரவுண்ட்-அப்

செய்திப்பிரிவு

மகளிருக்​கான ஆசிய கோப்பை டி20 கிரிக்​கெட் தொடர் துபா​யில் நடை​பெற்று வரு​கிறது. இதன் முதல் அரை இறுதி ஆட்​டத்​தில் ஹர்​மன்​பிரீத் கவுர் தலை​மையி​லான இந்​திய அணி, வங்​கதேசத்​துடன் இன்று பலப்​பரீட்சை நடத்​துகிறது. இந்த ஆட்​டம் இரவு 8 மணிக்கு நடை​பெறுகிறது.

லீக் சுற்​றில் ‘ஏ’ பிரி​வில் இடம் பெற்​றிருந்த இந்​திய அணி அனைத்து ஆட்​டங்​களி​லும் வெற்றி பெற்​றிருந்​தது. நிகார் சுல்​தானா தலை​மையி​லான வங்​கதேச அணி, ஐக்​கிய அரபு அமீரகத்​துக்கு எதி​ரான ஆட்​டத்​தில் 34 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றதன் மூலம் அரை இறுதி போட்​டிக்கு தகுதி பெற்றிருந்தது.

இரண்டாவது சுற்றில் மாயா தோல்வி

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஜூனியர்களுக்கான சிறுமிகள் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் மாயா ராஜேஷ்வரன் ரேவதி, ரஷ்யாவின் அரினா லிகினாவை எதிர்த்து விளையாடினார். இதில் மாயா 3-6, 7-5, 5-7 என்ற செட் கணக்கில் போராடி தோல்வி அடைந்தார். இந்த ஆட்டம் 2 மணி நேரம் 16 நிமிடங்கள் நடைபெற்றது.

நமீபியாவை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா

தென் ஆப்பிரிக்கா - நமீபியா அணிகள் இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று நமீபியாவில் உள்ள விண்ட்ஹோக் நகரில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 348 ரன்கள் குவித்தது. ஜோர்டான் ஹெர்மான் 126 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 17 பவுண்டரிகளுடன் 150 ரன்கள் விளாசினார்.

மழை காரணமாக நமீபியா அணிக்கு 31 ஓவர்களில் 262 ரன்கள் சேர்க்க வேண்டும் என இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. அந்த அணியால் 31 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 162 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. அதிகபட்சமாக மலான் க்ரூகர் 34, ஜேஜே ஸ்மித் 31 ரன்கள் சேர்த்தனர். டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 99 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

இந்தியா ‘ஏ’ அணியில் ஹர்திக் பாண்டியா

ஆஸ்திரேலியா ‘ஏ’ கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து இந்தியா ‘ஏ‘ அணிக்கு எதிராக 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி வரும் 22-ம் தேதி முதல் 25-ம் தேதி வரையும், 2-வது டெஸ்ட் 29-ம் தேதி முதல் அக்டோபர் 2 வரையும் புதுச்சேரியில் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து ஒருநாள் போட்டி அக்டோபர் 6, 9, 11-ம் தேதிகளில் நடைபெறுகிறது.

இந்த தொடர்களுக்கான இந்தியா ‘ஏ’ அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் ஒருநாள் போட்டிக்கான அணியில் சீனியர் ஆல்ரவுண்டரான 32 வயதாகும் ஹர்திக் பாண்டியா சேர்க்கப்பட்டுள்ளார். இதேபோன்று டெஸ்ட அணியில் காயத்தில் இருந்து குணமடைந்துள்ள சாய் சுதர்சன் இடம் பெற்றுள்ளார்.

அரையிறுதியில் ஜூனியர் ஹாக்கி அணி

ஆசிய கோப்பை ஜூனியர் ஹாக்கி சீனா​வின் மோகி நகரில் நடை​பெற்று வரு​கிறது. இதில் ஆடவர் பிரி​வில் நடப்பு சாம்​பிய​னான இந்​திய அணி தனது கடைசி லீக் ஆட்​டத்​தில் நேற்று சீன தைபேவுடன் மோதி​யது. இந்த மோதலில் இந்​திய அணி 15-0 என்ற கோல் கணக்​கில் வெற்றி பெற்​றது. 5 முறை சாம்​பிய​னான இந்​திய அணிக்கு இது 3-வது வெற்​றி​யாக அமைந்​தது.

இதன் மூலம் ‘ஏ’ பிரி​வில் இந்​திய அணி 3 வெற்​றி, ஒரு டிரா​வுடன் 10 புள்​ளி​களை முதலிடம் பிடித்து அரை இறுதி சுற்​றுக்கு முன்​னேறியது. இந்​திய அணி தரப்​பில் கேப்​டன் அன்​மோல் 6 கோல்​கள் (25, 29, 32, 33, 45, 51-வது நிமிடங்​கள்) அடித்து அசத்​தி​னார். ஆர்​யன் 3 கோல்​களும் (17, 52, 53-வது நிமிடங்​கள்), ஹர்​பால் 2 கோல்​களும் (48, 53-வது நிமிடங்​கள்), பிரப்​தீப் சிங் (18-வது நிமிடம்), குருசேவக் சிங் (22-வது நிமிடம்), அர்​ஜுன் சந்​தோஷ் ஹர்​குடே (28-வது நிமிடம்), அஜீத் (35-வது நிமிடம்) ஆகி​யோர் தலா ஒரு கோலும் அடித்​தனர்.

SCROLL FOR NEXT