விளையாட்டு

3 நாடுகள் கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்கா சாம்பியன்

செய்திப்பிரிவு

வின்ட்ஹோயக்: 3 நாடு​கள் கிரிக்​கெட் போட்​டி​யில் தென் ஆப்​பிரிக்க அணி 48 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் ஜிம்​பாப்​வேயை வீழ்த்தி சாம்​பியன் பட்​டம் வென்​றது.

நமீபி​யா, தென் ஆப்​பிரிக்​கா, ஜிம்​பாப்வே அணி​கள் மோதிய 3 நாடு​கள் கிரிக்​கெட் போட்டி நமீபி​யா​வின் வின்ட்​ஹோயக் நகரில் நடை​பெற்று வந்​தது.

இறு​திச் சுற்​றுக்கு தென் ஆப்​பிரிக்​கா, ஜிம்​பாப்வே அணி​கள் முன்​னேறிய நிலை​யில் நேற்று இறுதி ஆட்​டம் நடை​பெற்​றது.

முதலில் விளை​யாடிய தென் ஆப்​பிரிக்க அணி 20 ஓவர்​களில் 5 விக்​கெட் இழப்​புக்கு 205 ரன்​கள் குவித்​தது. ஜோர்​டன் ஹெர்​மான் 53, எஸ்​டர்​ஹுய்​சன் 32, டெவால்ட் பிரே​விஸ் 32 ரன்​கள் சேர்த்​தனர். பின்​னர் விளை​யாடிய ஜிம்​பாப்வே அணி 18 ஓவர்​களில் 157 ரன்​களுக்கு ஆட்​ட​மி​ழந்​தது. இதையடுத்து 48 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற தென் ஆப்​பிரிக்க அணி கோப்​பையைத் தட்​டிச் சென்​றது. தென் ஆப்​பிரிக்​கா​வின் டூயன் ஜான்​சன், ஜான் போர்​ட்​டு​யின் தலா 3 விக்​கெட்​களைக் கைப்​பற்​றினர்​.

SCROLL FOR NEXT