ஜோகன்னஸ் பர்க்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இம்மாத இறுதியில் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில் ஒருநாள் போட்டித் தொடரின் ஆட்டங்கள் வரும் 24, 27 மற்றும் 30-ம் தேதிகளில் நடைபெறுகின்றன.
இந்த தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டன் தெம்பா பவுமா அணிக்கு திரும்பி உள்ளார். அனுபவம் வாய்ந்த குயிண்டன் டி காக், டேவிட் மில்லர் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளரான காகிசோ ரபாடா இடம் பெறவில்லை. அவருக்கு பதிலாக ஜெரால்டு கோட்ஸி சேர்க்கப்பட்டுள்ளார்.
தென் ஆப்பிரிக்க அணி விவரம்: தெம்பா பவுமா (கேப்டன்), எய்டன் மார்க்ரம், ரியான் ரிக்கெல்டன், குயின்டன் டி காக், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டேவிட் மில்லர், டோனி டி ஜோர்ஜி, மார்கோயான்சன், கார்பின் போஷ், மேத்யூ ப்ரீட்ஸ்கே, ஜெரால்ட் கோட்ஸி, ஓட்னீல் பார்ட்மேன், ஜார்ன் ஃபோர்டுயின், கேசவ் மகராஜ், க்வேனா மபாகா, லுங்கி நிகிடி.