விளையாட்டு

கடைசி ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ வெற்றி

செய்திப்பிரிவு

ராஜ்கோட்: இந்​தியா ‘ஏ’ – தென் ஆப்​பிரிக்கா ‘ஏ’ அணி​கள் இடையிலான 3-வது மற்​றும் கடைசி ஒரு​நாள் போட்டி ராஜ்கோட்​டில் நேற்று நடை​பெற்​றது. முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணி 50 ஓவர்​களில் 6 விக்​கெட்​கள் இழப்புக்கு 325 ரன்​கள் குவித்தது.

தொடக்க வீரர்​களான லுவான்​-ட்ரே பிரிட்​டோரியஸ் 98 பந்துகளில், 6 சிக்​ஸர்​கள், 9 பவுண்​டரி​களு​டன் 123 ரன்​களும் ரிவால்டோ முனு​சாமி 130 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 13 பவுண்டரிகளு​டன் 107 ரன்​களும் விளாசினர். இந்​தியா ‘ஏ’ அணி சார்​பில் கலீல் அகமது, பிரசித் கிருஷ்ணா, ஹர்​ஷித் ராணா ஆகியோர் தலா 2 விக்கெட்​கள் கைப்​பற்​றினர்.

326 ரன்​கள் இலக்​குடன் விளை​யாடிய இந்​தியா ‘ஏ’ அணி 49.1 ஓவர்​களில் 252 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அதிகபட்​ச​மாக ஆயுஷ் பதோனி 66, இஷான் கிஷன் 53 ரன்​கள் சேர்த்​தனர். தென் ஆப்​பிரிக்கா ‘ஏ’ அணி தரப்​பில் நகாபயோம்ஸி பீட்​டர் 4, ட்ஷெபோ மோரேகி 3, ஜான் போர்​டூ​யின் 2 விக்​கெட்​கள் வீழ்த்​தினர். 73 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற தென் ஆப்​பிரிக்கா ‘ஏ’ அணிக்கு இது ஆறு​தல் வெற்​றி​யாக அமைந்​தது.

முதல் ஒரு​நாள் போட்​டி​யில் 4 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தி​லும், 2-வது ஒரு​நாள் போட்டி​யில் 9 விக்​கெட்​கள் வித்​தியாசத்​தி​லும் வெற்றி பெற்ற இந்​தியா ‘ஏ’ அணி 3 ஆட்​டங்​கள் கொண்ட ஒரு​நாள் போட்டி தொடரை 2–1 என கைப்​பற்றி கோப்​பையை வென்​றது.

SCROLL FOR NEXT