ஷுப்​மன் கில்

 
விளையாட்டு

பஞ்​சாப் அணிக்​காக இன்று களமிறங்​கு​கிறார் ஷுப்​மன் கில்

செய்திப்பிரிவு

ஜெய்ப்​பூர்: விஜய் ஹசாரே கோப்​பைக்​கான கிரிக்​கெட் லீக் போட்​டி​யில் இந்​திய அணி​யின் கேப்​டன் ஷுப்​மன் கில் இன்று பஞ்​சாப் அணிக்​காக களமிறங்​க​வுள்ளார்.

33-வது விஜய் ஹசாரே கோப்​பைக்​கான ஒரு நாள் கிரிக்​கெட் தொடர் இந்​தி​யா​வின் பல்​வேறு நகரங்​களில் நடை​பெற்று வரு​கிறது. இதில் எலைட் பிரி​வில் பங்​கேற்​றுள்ள 32 அணி​கள் 4 பிரி​வாக பிரிக்​கப்​பட்டு லீக் சுற்​றில் மோதி வரு​கின்​றன. இந்​தத் தொடரில் இந்​திய அணி​யின் நட்​சத்​திர வீரர்​கள் விராட் கோலி, ரோஹித் சர்​மா, ரிஷப் பந்த் ஆகியோர் விளை​யாடினர்.

இந்​நிலை​யில், இந்​திய ஒரு​நாள் மற்​றும் டெஸ்ட் அணி​யின் கேப்​டன் ஷுப்​மன் கில், விஜய் ஹசாரே கோப்பை தொடரில் இன்று முதல் விளை​யாட உள்​ளார். பஞ்​சாப் அணிக்​காக அவர் விளை​யாட உள்​ளார். இன்று ஜெய்ப்​பூர் மைதானத்​தில் நடை​பெறவுள்ள போட்​டி​யில் பஞ்​சாப் - சிக்​கிம் அணி​கள் மோத உள்​ளன.

டி20 போட்​டிகளில் மோச​மான ஃபார்ம் காரண​மாக 2026 டி20 உலகக்​கோப்பை இந்​திய அணி​யில் இருந்து ஷுப்​மன் கில் நீக்​கப்​பட்​டார் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

SCROLL FOR NEXT