விளையாட்டு

ஷுப்மன் கில், ஜாஸ் பட்லர் அரை சதம்: லக்னோ அணியை வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ்

செய்திப்பிரிவு

லக்னோ: ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்​தி​யது. குஜ​ராத் அணி​யின் கேப்​டன் ஷுப்​மன் கில், ஜாஸ் பட்​லர் ஆகியோர் அரை சதம் விளாசி அணிக்கு வெற்றி தேடித் தந்​தனர்.

இந்த ஆட்​டம் லக்​னோ​விலுள்ள அடல்​பி​காரி வாஜ்​பாய் மைதானத்​தில் நேற்று பிற்​பகல் 3.30 மணிக்கு நடை​பெற்றது. முதலில் விளை​யாடிய லக்னோ அணி 20 ஓவர்​களில் 8 விக்​கெட்​கள் இழப்​புக்கு 164 ரன்​கள் எடுத்​தது. தொடக்க ஆட்​டக்​காரர்​களாக களமிறங்​கிய எய்ட்ன் மார்க்​ரம், மிட்​செல் மார்ஷ் அதிரடி​யாக விளை​யாடத் தொடங்​கினர். ஆனால் இந்த அதிரடி நீடிக்​க​வில்​லை. மிட்​செல் மார்ஷ் 4 பந்​துகளில் தலா ஒரு சிக்​ஸர், பவுண்​டரி​யுடன் 11 ரன்​கள் எடுத்து ஆட்​ட​மிழந்​தார்.

          

எய்​டன் மார்க்​ரம் 21 பந்​துகளில் 5 பவுண்​டரி, ஒரு சிக்ஸருடன் 30 ரன்​கள் சேர்த்து வீழ்ந்​தார். அதன் பின்​னர் வந்த வீரர்​களில் யாரும் 20 ரன்​களைத் தாண்​ட​வில்​லை. கேப்​டன் ரிஷப் பந்த் 11 பந்​துகளில் 18 ரன்​களும், ஆயுஷ் பதோனி 9, நிக்​கோலஸ் பூரன் 19, அப்​துல் சமத் 18, முகுல் சவுத்ரி 18, ஜார்ஜ் லிண்டே 16 ரன்​கள் சேர்த்​தனர். முகமது ஷமி 12 ரன்களும், அவேஷ் கான் 4 ரன்​களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்​தனர்.

குஜ​ராத் அணி தரப்​பில் பிரசித் கிருஷ்ணா அபார​மாக பந்து​வீசி 28 ரன்​கள் கொடுத்து 4 விக்​கெட்​களைக் கைப்பற்றினார். அசோக் சர்மா 2 விக்​கெட்​களை​யும், முகமது சிராஜ், காகிசோ ரபாடா ஆகியோர் தலா ஒரு விக்​கெட்​டும் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து 165 ரன்​கள் எடுத்​தால் வெற்றி என்ற இலக்​குடன் குஜ​ராத் அணி விளை​யாடத் தொடங்கியது.

தொடக்க ஆட்​டக்​கார​ரான சாய் சுதர்​ஷன் 14 பந்​துகளில் 3 பவுண்​டரி​களு​டன் 15 ரன்​கள் சேர்த்த நிலை​யில் திக்​வேஷ் சிங் ராதி பந்​து​வீச்​சில் வீழ்ந்​தார். ஆனால் 2-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்​டன் ஷுப்​மன் கில்​லும், ஜாஸ் பட்​லரும் அதிரடி​யாக விளை​யாடி ரன்​களைக் குவித்​தனர். 2-வது விக்​கெட்​டுக்கு இந்த ஜோடி 86 ரன்​கள் குவித்தது. ஷுப்​மன் கில் 40 பந்​துகளில் 6 பவுண்டரி​கள், ஒரு சிக்​ஸருடன் 56 ரன்​கள் குவித்து பிரின்ஸ் யாதவ் பந்​தில் வீழ்ந்​தார். ஜாஸ் பட்​லர் 37 பந்​துகளில் 11 பவுண்​டரி​களு​டன் 60 ரன்​களை விளாசி​னார்.

இறு​தி​யில் 18.4 ஓவர்​களில் 3 விக்​கெட் இழப்​புக்கு 165 ரன்கள் குவித்து குஜ​ராத் வெற்றி கண்​டது. வாஷிங்​டன் சுந்தர் 13 பந்​துகளில் 21 ரன்​களும், ராகுல் டொ​வாட்​டியா 8 பந்​துகளில் 10 ரன்​களும் எடுத்து ஆட்​ட​மிழக்​காமல் இருந்தனர். இதையடுத்து 7 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் குஜ​ராத் அணி வெற்றி பெற்​றது. இந்த ஆட்​டத்​தில் சிறப்பாக பந்​து​வீசி 4 விக்​கெட்​களைச் சாய்த்த பிரசித் கிருஷ்ணா ஆட்​ட​நாயகன் விருது பெற்​றார்.

லக்னோ அணி தரப்​பில் முகமது ஷமி, பிரின்ஸ் யாதவ், திக்​வேஷ் சிங் ராதி ஆகியோர் தலா ஒரு விக்​கெட்​டைக் கைப்​பற்​றினர். குஜ​ராத் அணிக்கு இது 2-வது வெற்​றி​யாக அமைந்​தது. அந்த அணி இது​வரை 4 போட்​டிகளில் விளையாடி 2 வெற்​றி, 2 தோல்வி​களு​டன் 4 புள்​ளி​களைப் பெற்றுள்​ளது.

அதே​போல் லக்னோ அணிக்கு இது 2-வது தோல்​வி​யாக அமைந்​தது. அந்த அணி​யும் இது​வரை 4 போட்​டிகளில் விளை​யாடி 2 வெற்​றி, 2 தோல்வி​களு​டன் 4 புள்​ளி​களை கையகப்​படுத்​தி​யுள்​ளது. குஜ​ராத் அணி தனது அடுத்த ஆட்​டத்​தில் வரும் 17-ம் தேதி கொல்​கத்தா அணி​யைச் சந்​திக்​க​வுள்​ளது. லக்னோ அணி தனது அடுத்த ஆட்​டத்​தில் வரும் 15-ம் தேதி ராயல் சாலஞ்​சர்​ஸ்​ பெங்​களூரு அணி​யை எ​திர்​த்​து ​விளை​யாடவுள்​ளது.

கோலி சாதனையை முறியடித்தார் கில்

ஐபிஎல் போட்​டிகளில் குறைந்த வயதில் 4 ஆயிரம் ரன்​கள் குவித்​தவர் என்ற விராட் கோலி​யின் சாதனையை குஜ​ராத் டைட்​டன்ஸ் அணி​யின் கேப்​டன் ஷுப்​மன் கில் முறியடித்தார். 2016-ல் விராட் கோலி​யின் வயது 27 ஆண்டு 195 நாட்​க ளாக இருந்​த​போது ஐபிஎல் போட்​டிகளில் 4 ஆயிரம் ரன்​களைக் கடந்து சாதனை படைத்​திருந்​தார்.

இந்​நிலை​யில் லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் அணிக்கெதிரான ஆட்​டத்​தில் ஐபிஎல் போட்​டிகளில் 4 ஆயிரம் ரன்​களை ஷுப்​மன் கில் கடந்​தார். ஷுப்​மன் கில் 26 ஆண்டு 216 நாட்​களி​லேயே இந்த சாதனையைச் செய்து​ வி​ராட்​டின் சாதனையை முறியடித்​துள்​ளார். ஷுப்​மன் கில் தற்​போது 118 ஐபிஎல் போட்​டிகளில் பங்​கேற்று 4,031 ரன்களைக்​ குவித்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT