விளையாட்டு

உலக பாரா வில்வித்தையில் தங்கம் வென்றார் ஷீத்தல் தேவி

செய்திப்பிரிவு

அகமதாபாத்: உலக பாரா வில்வித்தை ஸ்டேஜ் 3 போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. இதன் இறுதி நாளான நேற்று மகளிருக்கான காம்பவுண்ட் தனி​நபர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் ஷீத்தல் தேவி, கஜகஸ்​தானின் ஐதா செய்டனுடன் மோதினார்.

இருவரும் 144 புள்ளிகளை குவித்ததால் வெற்றியை தீர்மானிக்க ஷூட்அவுட் நடத்தப்பட்டது. இதில் ஷீத்தல் தேவி 10-9 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றார்.

ரீகர்வ் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் ஹர்விந்தர் சிங், பாவ்னா ஜோடி 6-0 என்ற கணக்கில் சீனாவின் லியாங் கியுரோங், சியா லீ ஜோடியை வீழ்த்தி தங்கம் வென்றது. ரீகர்வ் மகளிர் தனிநபர் பிரிவில் இந்தியாவின் பாவ்னா 6-0 என்ற கணக்கில் சகநாட்டைச் சேர்ந்த ராஜயை வீழ்த்தி வெண்கலம் வென்றார்.

காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் ஷீத்தல் தேவி, தோமன் குமார் ஜோடி 157-145 என்ற செட் கணக்கில் இராக்கின் சாரா அல் ஹமித், அப்பாஸ் காதிம் ஜோடியை வீழ்த்தி வெண்கலம் பெற்றது.

மகளிருக்கான காம்பவுண்ட் தனிநபர் பிரிவில் இந்தியாவின் சரிதா 141-140 என்ற கணக்கில் சீனாவின் வாங் ஹூட்டிங்கை வீழ்த்தி வெண்கலம் வென்றார். ஆடவருக்கான காம்பவுண்ட் தனிநபர் பிரிவில் இந்தியாவின் தோமன் குமார் வெண்கலம் கைப்பற்றினார்.

SCROLL FOR NEXT