சஞ்சு சாம்சன்

 
விளையாட்டு

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர்: இந்திய அணியில் சஞ்சு சாம்சன் சேர்ப்பு

வேட்டையன்

மும்பை: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய அணியின் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து சுற்று பயணத்தில் டி20 கிரிக்கெட் அணியில் சஞ்சு சாம்சன் இடம்பெற்றிருந்தார். அந்த தொடருக்கு பின்னர் நடைபெற்ற ஜிம்பாப்வே தொடருக்கான அணியில் அவர் இடம்பெறவில்லை.

கடந்த டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தொடர் நாயகன் விருதை வென்றிருந்தார் 31 வயதான சஞ்சு சாம்சன். இந்நிலையில், அணியில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது குறித்து பல்வேறு கருத்துகள் எழுந்தது. இந்த சூழலில் வரும் 13 முதல் 17-ம் தேதி வரையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரில் அவர் இடம்பெற்றுள்ளார்.

இந்த மாத இறுதியில் நடைபெறும் ஆசிய போட்டிக்கான தொடரில் பங்கேற்க இந்திய அணி பயணிக்க உள்ளது. அதற்கு முன்பாக இந்த தொடர் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிஸ்தான் தொடருக்கான இந்திய அணி

ஷ்ரேயஸ் ஐயர் (கேப்டன்), திலக் வர்மா (துணை கேப்டன்), அபிஷேக் ஷர்மா, வைபவ் சூர்யவன்ஷி, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, அக்சர் படேல், வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இவர்களுடன் பும்ரா, ஹர்ஷித் ராணா, வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார் ஆகியோரும் அணியில் உள்ளனர். இருப்பினும் இவர்கள் நால்வரும் உடற்தகுதியை பொறுத்தே தொடரில் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT