சஞ்சு சாம்சன், முகமது ஆமீர்

 
விளையாட்டு

“சஞ்சு சாம்சன் ஆடியது வாழ்நாளின் சிறந்த இன்னிங்ஸ்!” - முன்னாள் பாக். வீரர் ஆமீர் கருத்து

வேட்டையன்

புதுடெல்லி: நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது இந்திய அணி. மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெற்ற வெற்றி மூலம் இது சாத்தியமானது. இந்நிலையில், இந்தியாவின் வெற்றிக்கு உதவிய சஞ்சு சாம்சன் குறித்து முன்னாள் பாகிஸ்தான் வீரர் முகமது ஆமீர் பேசியுள்ளார்.

முன்னதாக, இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறாது என ஆமீர் தெரிவித்திருந்தார். இந்திய அணி அவரது கருத்தை மாற்றியுள்ளது. இதையடுத்து அவரை சமூக வலைதளத்தில் கடுமையாக நெட்டிசன்கள் ட்ரோல் செய்தனர்.

          

“எல்லோரும் நான் சொன்னது தவறு என இந்திய அணி நிரூபித்துள்ளதாக சொல்கிறீர்கள். ஆனால், யாரை நாம் புகழ வேண்டும் என்பதை பாருங்கள். சஞ்சு சாம்சன் தன்னுடைய வாழ்நாளின் சிறந்த இன்னிங்ஸை வெளிப்படுத்தி உள்ளார். அவரது ஆட்டத்தை ஐபிஎல் உட்பட பல்வேறு இடங்களில் பார்த்துள்ளேன். ஆனால், கட்டாய வெற்றி என்ற நெருக்கடி மிகுந்த போட்டியில் சஞ்சுவின் ஆட்டம் ரொம்பவே ஸ்பெஷல்.

ஆனால், இந்திய அணியின் ஆட்டம் எப்படி என்று பார்த்தால் மிகவும் மோசமாக உள்ளது. களத்தில் கேட்ச்களை நழுவ விடுகின்றனர். பும்ராவை தவிர மற்ற அனைத்து பவுலர்களும் ரன்களை கொடுக்கின்றனர்” என அவர் தெரிவித்துள்ளார்.

வரும் 4-ம் தேதி அன்று நடைபெற உள்ள முதல் அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூஸிலாந்து அணிகள் விளையாடுகின்றன. அதையடுத்து 5-ம் தேதி அன்று நடைபெறும் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடுகின்றன.

SCROLL FOR NEXT