விளையாட்டு

மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக சதம் விளாசிய முதல் சிஎஸ்கே வீரர் சஞ்சு சாம்சன்!

ஆர்.முத்துக்குமார்

நேற்று வான்கடேயில் நடைபெற்ற ஐபிஎல் 2026-ன் 33-வது போட்டியில் சஞ்சு சாம்சன் சிஎஸ்கேவுக்காக விளாசிய 54பந்து 101 ரன் காட்டடி இன்னிங்ஸின் ரன்களை மும்பை இந்தியன்ஸின் 11 வீரர்களும் சேர்ந்து 19 ஓவர்களில் எடுத்து 104 ரன்களுக்கு வீழ்ந்தது. ஒருவர் அடித்த ரன்களை மும்பையின் 11 வீரர்கள் சேர்ந்து எடுத்தது மும்பை இந்தியன்ஸின் ஐபிஎல் வரலாற்றில் மாபெரும் அடி.

இந்த வெற்றி சிஎஸ்கே அணியின் ஐபிஎல் தொடரின் மிகப்பெரிய வெற்றியாகும். அதே வேளையில் ஐபிஎல் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸின் ஆகப்பெரும் தோல்வியாகும். 2013-ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 87 ரன்களில் தோல்வி அடைந்த பிறகு மும்பை இந்தியன்ஸின் மாபெரும் அடிசறுக்கல் இதுவே.

குறிப்பாக வான்கடேயில் ஆர்சிபிக்கு எதிராக 2015-ம் ஆண்டு 39 ரன்களில் தோற்றதுதான் அதிக ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதாகும் நேற்று அது தவிடு பொடியாகி 103 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. சிஎஸ்கே ஐபிஎல் தொடரில் முதன் முதலாக 100+ ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதற்கு முன்பு 2015 தொடரில் சேப்பாக்கத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாபை 97 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதே மிகப்பெரிய வெற்றியாக இருந்தது.

அதே போல் சிஎஸ்கேவுக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் எடுத்த 104 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது, சிஎஸ்கேவுக்கு எதிராக ஆகக்குறைந்த ரன் எண்ணிக்கையாகும். மும்பை இந்தியன்ஸை 19 முறை சிஎஸ்கே வீழ்த்தி சிஎஸ்கே சாதனை புரிந்துள்ளது. பஞ்சாப் கிங்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணியை 18 முறை தோற்கடித்துள்ளது.

மாறாக மும்பை இந்தியன்ஸ் அணி சிஎஸ்கேவை 21 முறை வென்றுள்ளது. கடந்த 9 முறை இரு அணிகள் மோதியதில் மும்பை 2 முறையே வென்றுள்ளது அதுவும் குறிப்பாக 2023-க்குப் பிறகு இரு அணிகளும் 6 முறை மோதியதில் மும்பை ஒரேயொரு வெற்றியையே சாதித்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சதம் விளாசிய முதல் வீரர் சஞ்சு சாம்சன் என்பதும் குறிப்பிடத்தக்கது. 2021-ல் ருதுராஜ் கெய்க்வாட் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 88 ரன்கள் எடுத்ததுதான் சிஎஸ்கே வீரரின் அதிகபட்ச ஸ்கோர்.

SCROLL FOR NEXT