கிளாஸ்கோ: நடப்பு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் சாக்ஷி சவுத்ரி மற்றும் பிரியா கங்காஸ் தங்கம் வென்றனர். இதுவரை இந்த தொடரில் நான்கு தங்கங்களை இந்திய குத்துச்சண்டை வீராங்கனைகள் வென்றுள்ளனர்.
இந்திய நேரப்படி சனிக்கிழமை இரவு 9 மணி அளவில் நடைபெற்ற 51 கிலோ எடைப்பிரிவுக்கான மகளிர் குத்துச்சண்டை இறுதிப் போட்டியில் இங்கிலாந்தின் ரூபி ஒயிட் உடன் சாக்ஷி விளையாடினார். 5-0 என்ற கணக்கில் ரூபியை வீழ்த்தி சாக்ஷி தங்கம் வென்றார்.
60 கிலோ எடைப்பிரிவுக்கான மகளிர் குத்துச்சண்டை இறுதிப் போட்டியில் கனடாவின் மேரி பத்தூல் அல்-அஹ்மதியா உடன் பலப்பரீட்சை செய்தார் இந்தியாவின் பிரியா. இதில் 4-1 என்ற கணக்கில் தங்கம் வென்றார் பிரியா.