டாக்கா: தெற்காசிய ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் சாம்பியன்ஷிப் போட்டி வங்கதேசத்தின் டாக்கா நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நேற்று மாலத்தீவுகளுடன் மோதியது. இந்த மோதலில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது.
இந்திய அணி தரப்பில் 38-வது நிமிடத்தில் பெனால்டி கிக் வாய்ப்பை சுகைல் அகமத் பாத் கோலாக மாற்றி அசத்தினார்.