ஜோகன்னஸ்பர்க்: தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் சார்பில் நடத்தப்படும் எஸ்ஏ20 கிரிக்கெட் தொடரின் 5-வது சீசன் போட்டி 2027-ம் ஆண்டு ஜனவரி 17-ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ், ஜோகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ், எம்ஐ கேப்டவுன், பிரிட்டோரியா கேபிடல்ஸ், பார்ல் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் ஆகிய 6 அணிகள் கலந்துகொள்கின்றன.