விளையாட்டு

உலகக் கோப்பை தோல்விக்கு பிறகு கிரிக்கெட்டில் இருந்து விலக நினைத்தேன்: மனம் திறக்கும் ரோஹித் சர்மா

செய்திப்பிரிவு

புதுடெல்லி: 2023-ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை இறு​திப் போட்​டி​யில் தோல்வி அடைந்​த​தால் கிரிக்​கெட்டை விட்​டு​விட நினைத்​தேன் என இந்​திய அணி​யின் முன்​னாள் கேப்​டன் ரோஹித் சர்மா தெரி​வித்​துள்​ளார்.

2023-ம் ஆண்டு சொந்த மண்​ணில் நடை​பெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் ரோஹித் சர்மா தலை​மையி​லான இந்​திய அணி தொடர்ச்​சி​யாக 9 வெற்​றிகளை குவித்து இறு​திப் போட்டியில் நுழைந்​தது. ஆனால் துர​திருஷ்ட​வச​மாக இறு​திப் போட்​டி​யில் இந்​திய அணி, ஆஸ்​திரேலி​யா​விடம் தோல்வி அடைந்து பட்​டம் வெல்​லும் வாய்ப்பை இழந்​திருந்​தது.

டிரா​விஸ் ஹெட் அதிரடி​யாக விளை​யாடி சதம் அடித்து இந்​திய அணி​யின் பட்​டம் வெல்​லும் கனவை தகர்த்​தார். இந்​நிலை​யில் டெல்​லி​யில் நடை​பெற்ற நிகழ்ச்சி ஒன்​றில் கலந்து கொண்ட இந்திய அணி​யின் சீனியர் பேட்​ஸ்​மேனும் முன்​னாள் கேப்டனுமான ரோஹித் சர்​மா, 50 ஓவர் உலகக் கோப்பை இறு​திப் போட்​டி​யின் தோல்​வி​யால் அடைந்த வேதனையை பகிர்ந்​து​கொண்​டார்.

அவர், கூறிய​தாவது: கடந்த 2023-ம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் ​போட்​டி​யில் ஏற்​பட்ட தோல்விக்​குப் பிறகு மிகுந்த கவலையாக இருந்​தது. இனிமேல் கிரிக்​கெட்டே விளை​யாட வேண்​டாம் என நினைத்​தேன். ஏனெனில், அந்த உலகக் கோப்பைத் தொடர் என்​னிடம் இருந்த அனைத்​தை​யும் எடுத்துக்கொண்​டது. என்​னிடம் கொடுப்​ப​தற்கு ஒன்றுமில்லாததைப் போன்று உணர்ந்​தேன்.

அந்த உணர்​விலிருந்து வெளிவர எனக்கு சிறிது காலம் தேவைப்பட்​டது. அந்த நேரத்​தில் எனக்கு மிக​வும் பிடித்த, மிக​வும் நேசிக்​கும் கிரிக்​கெட்​டை அவ்​வளவு எளி​தாக விட்​டு​விட முடி​யாது என்​பதை எனக்​குள் நானே நினைவு படுத்​திக்​கொண்டே இருந்தேன். மெது​வாக இழந்த ஆற்​றலை மீண்​டும் பெற்று கிரிக்கெட் விளை​யாடத் தொடங்​கினேன்.

உலகக் கோப்பை இறு​திப்​போட்​டி​யில் ஏற்​பட்ட தோல்​வி​யால் அணி​யில் உள்ள அனை​வரும் மிகுந்த ஏமாற்​றத்​தில் இருந்​தோம். என்ன நடந்​தது என்​பதை எங்​களால் நம்ப முடிய​வில்​லை. தனிப்பட்ட முறை​யில் அது எனக்கு மிகவும் கடின​மான நேரம்.

ஏனெனில், 50 ஓவர் உலகக் கோப்​பைத் தொடருக்​காக என்​னால் முடிந்த அனைத்​தை​யும் கொடுத்​தேன். இது வெறும் 2-3 மாதங்​களுக்கு முன்​பாக நிகழ்ந்​தது இல்​லை. கடந்த 2022-ம் ஆண்டு நான் கேப்​டன் பொறுப்பை ஏற்​றுக் கொண்​ட​திலிருந்து இந்த உலகக் கோப்​பைத் தொடருக்​காக தயா​ரானேன்.

உலகக் கோப்​பையை வெல்​வதே என்​னுடைய இலக்​காக இருந்தது. அது டி20 உலகக் கோப்​பை​யாக இருந்​தா​லும் சரி, 50 ஓவர் உலகக் கோப்​பை​யாக இருந்​தா​லும் சரி. அது நடக்காதபோது, நான் முற்​றி​லும் நொறுங்​கிப் போனேன். என் உடலில் எந்த சக்​தி​யும் மிச்​சமில்​லை. அதில் இருந்து என்னை மீண்டும் பழைய நிலைக்​குக் கொண்​டுவர எனக்கு இரண்டு மாதங்​கள் ஆனது.

ஒரு விஷ​யத்​தில் அதி​க​மாக முதலீடு செய்​து, அதற்​கான பலன் கிடைக்​க​வில்லை என்​றால், மிகுந்த ஏமாற்​றமடைவது இயல்பானது. எனக்​கும் அது​தான் நடந்​தது. ஆனால் வாழ்க்கை இதோடு முடிவடை​யாது என்​ப​தை​யும் நான் அறிந்​திருந்​தேன். ஏமாற்​றத்தை எப்​படி சமாளிப்​பது, அதில் இருந்து மீண்டு வரு​வது எப்​படி, புதி​தாகத் தொடங்​கு​வது எப்​படி என்​பது எனக்கு பெரிய பாட​மாக இருந்​தது.

அமெரிக்கா மற்​றும் மேற்​கிந்​தி​யத் தீவு​களில் நடை​பெற்ற 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் ஏதோ நிகழப்​ போகிறது என்பதை அறிந்​தேன், அதனால் நான் என் முழு கவனத்​தை​யும் அதில் செலுத்​தினேன். இப்​போது இதனைக் கூறு​வதற்கு மிக​வும் எளி​தாக இருக்​கிறது. ஆனால், அந்த நேரத்​தில் அது மிக​வும் கடினமாக இருந்​தது. இவ்​வாறு ரோஹித் சர்மா கூறி​னார்.

2023-ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை இறு​திப் போட்​டி​யில் தோல்வி அடைந்த இந்​திய அணி அடுத்த ஆண்டு நடை​பெற்ற டி 20 உலகக் கோப்பை தொடரில் சாம்​பியன் பட்​டம் வென்று அசத்தியிருந்​தது. இந்​தத் தொடரில் சாம்​பியன் பட்​டம் வென்ற பின்​னரே சர்​வ​தேச டி 20 மற்​றும் டெஸ்ட் போட்​டிகளில் இருந்து ரோஹித் சர்மா ஓய்வு பெற்​றார்.

தொடர்ந்து ஒரு​நாள் போட்​டிக்​​கான கேப்​டன்​ பத​வி​யில்​ இருந்​தும்​ வில​கி​னார்​. தற்​போது 2027-ம்​ ஆண்​டு நடை​பெற உள்​ள 50 ஓவர்​ உலகக்​ கோப்​பையை கருத்​தில்​ கொண்​டு சர்​வ​தேச ஒரு​நாள்​ போட்​டிகளில்​ கவனம்​ செலுத்​தி வருகிறார்​.

SCROLL FOR NEXT