விளையாட்டு

இந்​திய அணி​யின் வெற்றிப் பயணம் தொடரும்: ரோஹித் சர்மா நம்​பிக்கை

செய்திப்பிரிவு

மும்பை: இந்​திய கிரிக்​கெட் அணி​யின் வெற்​றிப் பயணம் தொடரும் என்று இந்​திய அணி​யின் முன்​னாள் கேப்​டன் ரோஹித் சர்மா நம்​பிக்கை தெரி​வித்​துள்​ளார். கடந்த 8-ம் தேதி நடை​பெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்​டி​யில் இந்​திய அணி, நியூஸிலாந்தை வென்று கோப்​பையைக் கைப்​பற்​றியது. 3-வது முறை​யாக டி20 உலகக் கோப்​பையை வென்று இந்​திய அணி சாதனை படைத்​திருந்​தது.

இந்​திய கிரிக்​கெட் அணி சமீபத்​தில் 3-வது முறை​யாக 20 ஓவர் உலக கோப்​பையை வென்று அசத்​தி​யது. இந்​நிலை​யில் இந்​திய அணி இன்​னும் பல உலக கோப்​பைகளை வெல்​லும் என்​றும், அணி​யின் வெற்றி வேட்டை தொடரும் என்​றும் முன்​னாள் கேப்​டன் ரோஹித் சர்மா தெரி​வித்து உள்​ளார்.

இதுதொடர்​பாக மும்​பை​யில் நடை​பெற்ற நிகழ்ச்சி ஒன்​றில் பங்​கேற்ற அவர் கூறிய​தாவது: ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்​டி​யில் இந்​திய அணி வெற்றி பெற்​றுள்​ளது மகிழ்ச்சி அளிக்​கிறது. என்​னுடைய தலை​மையி​லான டி20 அணி 2024-ல் வென்​றதைப் போல​வே, தற்​போது சூர்​யகு​மார் யாதவ் தலை​மையி​லான அணி கோப்​பையைக் கைப்​பற்றி சாதனை படைத்​துள்​ளது.

          

இந்​திய ஆடவர் மற்​றும் மகளிர் அணி​கள் சமீப​கால​மாகத் தொடர்ந்து ஐசிசி கோப்​பைகளை வென்று வரு​வது மகிழ்ச்சி அளிக்​கிறது. இந்த வெற்​றிப்பயணம் வெறும் தொடக்​கம் மட்​டுமே என்று நான் நம்​பு​கிறேன். போட்​டி​யில் தொடர்ந்து உத்​வேகம் கிடைப்​பது முக்​கி​யம் என்று நான் நம்​பு​கிறேன்.

தற்​போது அந்த உத்​வேகம் ஆடவர், பெண்​கள் அணி​களுக்கு கிடைத்​துள்​ளது. நாம் இந்த வேகத்​தைத் தொடர்ந்து முன்​னெடுத்​துச் செல்ல வேண்​டும். இந்த அணி​கள் இன்​னும் பல உலக கோப்​பைகளை வெல்ல வேண்​டும். இந்​திய அணி​யின் வெற்​றிப் பயணம் தொடரும் என்று நான் நம்​பு​கிறேன். இந்த வெற்​றிக்கு என தனி​யாக ரகசி​யம் ஏது​மில்​லை.

இது முழுக்க முழுக்க வீரர்​கள்- வீராங்​க​னை​களின் கடின உழைப்​புக்கு கிடைத்த பரி​சாகும். சர்​வ​தேச கிரிக்​கெட் வீரர்​கள்- வீராங்​க​னை​கள் தாங்​கள் எட்​டி​யிருக்​கும் இந்​தச் சாதனைகளை அடைவதற்​காக மிகக் கடுமை​யாக உழைக்​கின்​றனர். ஆடு​களத்​தில் விளை​யாடிச் சாதிக்​கும் வீரர்​கள் மட்​டுமே இதற்கு முழு காரணம் அல்ல.

இந்த வெற்​றிக்கு தங்​கள் கடின உழைப்பை அர்ப்​பணிக்​கும் எண்​ணற்ற நபர்​களும் இருக்​கின்​றனர். கடந்த சில ஆண்​டு​களாக நாங்​கள் மேற்​கொண்டு வந்த முயற்​சிகள் அனைத்​தும் தற்​போது முழு​மை​யான வெற்​றி​யாக கிடைத்​திருப்​ப​தை​யும், நாங்​கள் எதிர்​பார்த்த சாதனை​களை எட்​டி​யிருப்​ப​தை​யும் காண்​பது மகிழ்ச்​சி அளிக்​கிறது.

ஆட​வர் அணி மட்​டுமல்​லாமல், மும்​பை​யில்​ மகளிர்​ அணி​யும்​ உலகக்​ கோப்​பையை வென்​ற அந்​த தருணம்​ மிக​வும்​ அற்​புத​மாக இருந்​தது. இவ்​​வாறு ரோஹித்​ சர்​​மா தெரிவித்தார்​.

SCROLL FOR NEXT