சென்னை: அண்ணா பல்கலைக்கழக மண்டலம்-1 வாலிபால் போட்டி திருவள்ளூர் அருகே உள்ள பிரதிக் ஷா பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.
இதன் இறுதிப் போட்டியில் ஆர்எம்கே பொறியியல் கல்லூரி, வேலம்மாள் பொறியியல் கல்லூரியை எதிர்த்து விளையாடியது. இந்த மோதலில் ஆர்எம்கே அணி 25-22, 25-18 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.
வெற்றி பெற்ற ஆர்எம்கே அணியை கல்லூரியின் தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம், துணைத் தலைவர் ஆர். எம். கிஷோர், கல்லூரியின் முதல்வர் முகமது ஜுனைத் பாராட்டி விருதுகளுடன் ரூ. 50,000 ரொக்கப் பரிசையும் வழங்கினர்.