விளையாட்டு

ரிங்கு சிங் விளாசலில் உத்தர பிரதேச அணி பதிலடி

செய்திப்பிரிவு

கோவை: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு - உத்தர பிரதேசம் அணிகள் இடையிலான ஆட்டம் கோவையில் நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு அணி முதல் இன்னிங்ஸில் 455 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக பாபா இந்திரஜித் 149, ஆந்த்ரே சித்தார்த் 121, குருசாமி அஜிதேஷ் 86 ரன்கள் சேர்த்தனர். இதையடுத்து பேட் செய்த உத்தரபிரதேச அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 33 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 87 ரன்கள் எடுத்தது. மாதவ் கவுசிக் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். அபிஷேக் கோஷ்வாமி 54, ஆர்யன் ஜூயல் 8 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

நேற்று 3-வது நாள் ஆட்டத்தை உத்தரபிரதேச அணி தொடர்ந்து விளையாடியது. அபிஷேக் கோஷ்வாமி 79, ஆர்யன் ஜூயல் 43, கேப்டன் கரண் சர்மா 11, ஆராத்யா யாதவ் 4, ஷிவம் மாவி 54 ரன்களில் ஆட்டமிழந்தனர். உத்தர பிரதேச அணி 113 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 339 ரன்கள் எடுத்திருந்த நிலையில் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் 3-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

ரிங்கு சிங் 157 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 98 ரன்களும் ஷிவம் சர்மா 18 ரன்களும் சேர்த்து களத்தில் இருந்தனர். கைவசம் 4 விக்கெட்கள் வைத்துள்ள உத்தரபிரதேச அணி 116 ரன்​கள் பின்​தங்​கிய நிலை​யில் இன்று கடைசி நாள் ஆட்​டத்தை எதிர்கொள்கிறது.

SCROLL FOR NEXT