விளையாட்டு

ரிங்கு சிங், அனுக்குல் ராய் பொறுப்பான ஆட்டம்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு முதல் வெற்றி

செய்திப்பிரிவு

கொல்கத்தா: ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி (கேகேஆர்) முதல் வெற்​றியைப் பெற்றுள்ளது. ராஜஸ்​தான் ராயல்ஸ் அணிக்​கெ​தி​ரான இந்த ஆட்​டத்​தில் கொல்​கத்தா அணி​யின் ரிங்கு சிங், அனுக்​குல் ராய் ஆகியோர் பொறுப்​புடன் விளை​யாடி அணிக்கு வெற்றி தேடித் தந்​தனர்.

ஐபிஎல் தொடரில் நேற்று பிற்​பகல் 3.30 மணிக்கு கொல்கத்தா மைதானத்​தில் கொல்​கத்​தா, ராஜஸ்​தான் ராயல்ஸ் அணி​கள் மோதின. முதலில் விளை​யாடிய ராஜஸ்​தான் அணி 20 ஓவர்​களில் 9 விக்​கெட் இழப்​புக்கு 155 ரன்​கள் எடுத்​தது. தொடக்க வீரர்​களாக களமிறங்​கிய யஷஸ்வி ஜெய்​ஸ்​வால், வைபவ் சூர்​ய​வன்​ஷி​யும் அதிரடிகாட்​டினர். வைபவ் அரோரா வீசிய ஒரு ஓவரில் வைபவ் சூர்​ய​வன்ஷி 3 பவுண்​டரி​களை விளாசி​னார்.

ஆட்​டத்​தின் 6-வது ஓவரை கேமரூடன் கிரீன் வீசி​னார். இந்த ஓவரில் ஜெய்​ஸ்​வால், சூர்​ய​வன்ஷி இரு​வரும் கூட்டாக 22 ரன்​கள் விளாசினர். அரை சதத்தை நெருங்​கிய நிலை​யில் சூர்​ய​வன்ஷி அவுட்​டா​னார். 28 பந்​துகளில் 6 பவுண்​டரி, 2 சிக்​ஸர்​களு​டன் அவர் 46 ரன்​கள் சேர்த்து வருண் சக்​ர​வர்த்தி பந்​தில் ரமன்​தீப் சிங்​கிடம் கேட்ச் கொடுத்து ஆட்​ட​மிழந்​தார்.

இதைத் தொடர்ந்து விளை​யாட வந்த துருவ் ஜூரெல் 5 ரன்கள் எடுத்த நிலை​யில், வருண் சக்​ர​வர்த்தி பந்​தில் வீழ்ந்தார். யஷஸ்வி ஜெய்​ஸ்​வால் 29 பந்​துகளில் 39 ரன்​கள் சேர்த்​து, சுனில் நரைனின் சுழலில் ஆட்​ட​மிழந்​தார். அதன் பின்​னர் வந்த வீரர்​கள் அதிரடி காட்​டாத​தால் அந்த அணி 29 ஓவர்​களில் 155 ரன்​கள் மட்​டுமே எடுத்​தது. கேப்​டன் ரியான் பராக் 12, ஷிம்​ரன் ஹெட்​மயர் 15, டோனவன் பெரைரா 7, ரவீந்​திர ஜடேஜா 9, ஜோப்ரா ஆர்ச்​சர் 9, ரவி பிஷ்னோய் 0, பிரிஜேஷ் சர்மா ஒரு ரன் எடுத்​தனர்.

கொல்​கத்தா அணி தரப்​பில் கார்த்​திக் தியாகி, வருண் சக்​ர​வர்த்தி ஆகியோர் தலா 3 விக்​கெட்​களைக் கைப்பற்றினர். சுனில் நரைன் 2 விக்​கெட்​களைச் சாய்த்தார். இதையடுத்து 156 ரன்​கள் எடுத்​தால் வெற்றி என்ற இலக்​குடன் கொல்​கத்தா அணி களமிறங்​கியது. ஆனால் முதல் பந்​திலேயே கொல்​கத்​தாவுக்கு அதிர்ச்சி வைத்​தி​யம் அளித்​தார் ஜோப்ரா ஆர்ச்​சர். முதல் பந்தை எதிர்​கொண்ட விக்​கெட் கீப்​பர் டிம் ஷெய்​பர்ட், ஆர்ச்​சர் பந்தில் போல்​டா​னார்.

2-வது ஓவரில் அஜிங்க்ய ரஹானே ரன் கணக்​கைத் தொடங்​காமலேயே நந்த்ரே பர்​கர் பந்​து​வீச்​சில் துருவ் ஜூரெலிடம் பிடி​கொடுத்து வீழ்ந்​தார். அதன் பின்​னர் வந்த அங்​ரிஷ் ரகு​வன்ஷி 10, கேமரூடன் கிரீன் 13 பந்​துகளில் 27, ரோமன் பாவெல் 23, ரமன்​தீப் சிங் 10 ரன்​கள் சேர்த்து பெவிலியன் வந்​தனர்.ஆனால் 7-வது விக்​கெட்​டுக்கு ஜோடி சேர்ந்த ரிங்கு சிங்​கும், அனுக்​குல் ராயும் பொறுப்​புடன் விளை​யாடி அணிக்கு முதல் வெற்​றியைப் பெற்றுத்தந்தனர்.

19.4 ஓவர்​களில் 6 விக்​கெட் இழப்​புக்கு 161 ரன்​கள் எடுத்த கொல்​கத்தா அணி, இந்த சீசனில் முதல் வெற்​றியைப் பதிவு செய்​தது. ரிங்கு சிங் 34 பந்​துகளில் 53 ரன்​களும் (5 பவுண்​டரி, 2 சிக்​ஸர்), அனுக்​குல் ராய் 16 பந்​துகளில் 29 ரன்களும் (1 பவுண்​டரி, 2 சிக்​ஸர்) எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்​தனர்.

85 ரன்​களுக்கு 6 விக்​கெட்​களை இழந்து தத்​தளித்த நிலையில் ரிங்கு சிங்​கும், அனுக்​குல் ராயும் நிதானத்துடனும், அதே நேரத்​தில் அடிக்க வேண்​டிய பந்துகளை பவுண்​டரிக்​கும், சிக்​ஸருக்​கும் விரட்டி ரன் குவித்​தனர்.ராஜஸ்​தான் அணி தரப்​பில் ரவீந்​திர ஜடேஜா 2, ஜோப்ரா ஆர்ச்​சர், நந்த்ரே பர்​கர், ரவி பிஷ்னோய், யஷ் ராஜ் புஞ்சா ஆகியோர் தலா ஒரு விக்​கெட்டை எடுத்​தனர்.

4 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணிக்கு இது முதல் வெற்​றி​யாக அமைந்தது. 3 விக்​கெட்​களை வீழ்த்​திய வருண் சக்​ர​வர்த்தி ஆட்​ட​நாயக​னாகத் தேர்வு செய்​யப்​பட்​டார்.அந்த அணி இது​வரை 7 ஆட்​டங்​களில் விளை​யாடி ஒரு வெற்​றி, 5 தோல்வி​களு​டன் 3 புள்​ளி​களைப் பெற்று பட்​டியலில் 9-வது இடத்​தில் உள்​ளது.

பஞ்​சாப், கொல்​கத்தா அணி​களுக்கு இடையி​லான ஒரு ஆட்​டம் மழை​யால் கைவிடப்​பட்​டது குறிப்​பிடத்​தக்​கது. அதே​நேரத்​தில் ராஜஸ்​தான் அணி 6 ஆட்​டங்​களில்​ விளையாடி 4 வெற்​றி, 2 தோல்​வி என 8 புள்​ளிகளைப்​ பெற்றுள்ளது.

SCROLL FOR NEXT