ராய்ப்பூர்: நடப்பு ஐபிஎல் சீசனில் ஞாயிற்றுக்கிழமை ராய்ப்பூரில் நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி பந்தில் ஆர்சிபி வெற்றி பெற்றது. இதனால் இந்த சீசனில் முதல் சுற்றோடு மும்பை இந்தியன்ஸ் அணி வெளியேறி உள்ளது.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி, முதலில் பந்து வீசியது. முதல் இன்னிங்ஸ் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது. திலக் வர்மா 57, நமன் திர் 47 ரன்கள் எடுத்தனர்.
ஆர்சிபி தரப்பில் பந்து வீசிய புவனேஷ்வர் குமார், 4 ஓவர்களில் 23 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். ஹேசில்வுட், ராஷிக் சலாம், ரொமாரியோ ஷெப்பர்ட் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ஆர்சிபி விரட்டியது.
இலக்கை விரட்டிய போது 39 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து ஆர்சிபி அணி தடுமாறியது. விராட் கோலி - 0, தேவ்தத் படிக்கல் - 12, கேப்டன் ரஜத் பட்டதார் - 8 ரன்னில் ஆட்டமிழந்தனர். அப்போது களத்துக்கு வந்தார் க்ருனால் பாண்டியா. 4-வது விக்கெட்டுக்கு ஜேக்கப் பெத்தெல் உடன் இணைந்து 55 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். பெத்தெல் 27 ரன்களில் வெளியேறினார்.
ஜிதேஷ் சர்மா 18, டிம் டேவிட் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். ஒரு பக்கம் ஆர்சிபி அணி விக்கெட்டுகளை இழந்த போதிலும் க்ருனால் பாண்டியா நிலையாக ஆடினார். 46 பந்துகளில் 73 ரன்கள் எடுத்து அவர் ஆட்டமிழந்தார். ரொமாரியோ ஷெப்பர்ட் 11 பந்துகளில் 4 ரன்கள் எடுத்தார்.
கடைசி பந்தில் ஆர்சிபி வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை வீசிய ராஜ் பவா வீசி இருந்தார். அதில் மூன்று வொய்ட், ஒரு நோ-பால் அவர் வீசி இருந்தார். கடைசி பந்தில் ஆர்சிபி வீரர் ராஷிக் சலாம் அந்த 2 ரன்களை எடுத்து தனது அணியை வெற்றி பெற செய்தார். இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு ஆர்சிபி.
அதேவேளையில் பட்டியலில் கடைசி இடத்தில் ஊழல் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் சுற்றோடு வெளியேறியுள்ளது. மும்பை அணி 11 ஆட்டங்களில் 8 தோல்வி, 3 வெற்றியை பதிவு செய்துள்ளது.