ஜெய்ப்பூர்: நடப்பு ஐபிஎல் சீசனின் 52-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை 77 ரன்களில் வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ். இதில் குஜராத் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் சிறப்பாக செயல்பட்டிருந்தார்.
ஜெய்ப்பூரில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, டாஸ் வென்று பந்து வீச முடிவு செய்தது. இந்த ஆட்டத்தில் ஜெய்ஸ்வால் ராஜாஸ்தான் அணியை வழிநடத்தினர். முதலில் பேட் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்தது. சாய் சுதர்ஷன் 55, ஷுப்மன் கில் 84, வாஷிங்டன் சுந்தர் 37 ரன்கள் எடுத்தனர்.
230 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விரட்டியது. ஜெய்ஸ்வால் 3, வைபவ் சூர்யவன்ஷி 16 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். ஹெட்மயர், துருவ் ஜுரெல், டோனவன் ஃபெரைரா, ஷுபம் துபே, ஆர்ச்சர், ஷனகா மற்றும் துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர்.
ராஜஸ்தான் சார்பில் ஜடேஜா 38, வைபவ் சூர்யவன்ஷி 36, ஜுரெல் 24 ரன்கள் எடுத்தனர். குஜராத் அணி 16.3 ஓவர்களில் 152 ரன்களில் ஆட்டமிழந்தது. இதன் மூலம் குஜராத் அணி 77 ரன்களில் வெற்றி பெற்றது. குஜராத் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான், 4 ஓவர்கள் வீசி 33 ரன்கள் கொடுத்து, 4 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். ஆட்ட நாயகன் விருதை அவர் வென்றார். இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறி உள்ளது. தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் குஜராத் வெற்றி பெற்றுள்ளது.