அகமதாபாத்: ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ரஷித் கான், தற்போது ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
நேற்று முன்தினம் குஜராத் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் ரஷித் கான் ஒரு விக்கெட் கைப்பற்றியிருந்தார். இந்நிலையில் ரஷித் கான் தந்தையாகியுள்ளார்.
நேற்று அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் இந்த மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்து கொண்டார். அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ரஷித் கான் தனது மகனுக்கு அஸ்லான் கான் என்று பெயரிட்டுள்ளார்.