சென்னை: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு - ரயில்வேஸ் அணிகள் இடையிலான ஆட்டம் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதலில் பேட் செய்த ரயில்வேஸ் அணி 53.3 ஓவர்களில் 184 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக சுபைர் அலி 75 ரன்கள் சேர்த்தார்.
தமிழக அணி தரப்பில் சோனு யாதவ், கேப்டன் சாய் கிஷோர் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். ஜெகநாதன் ஹெம்சுதேஷன் 2 விக்கெட்கள் கைப்பற்றினார். இதையடுத்து பேட் செய்த தமிழக அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 25 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 71 ரன்கள் சேர்த்தது.
விமல் குமார் 0, நாராயண் ஜெகதீசன் 30, பிரதோஷ் ரஞ்ஜன் பால் 19 ரன்களில் ஆட்டமிழந்தனர். பாபா இந்திரஜித் 13, ஆந்த்ரே சித்தார்த் 8 ரன்களில் ஆட்டமிழக்காமல் உள்ளனர். கைவசம் 7 விக்கெட்கள் இருக்க 113 ரன்கள் பின்தங்கியுள்ள தமிழக அணி இன்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுகிறது.