விளையாட்டு

சர்ச்சைக்குரிய அவுட்: ரகுவன்ஷிக்கு அபராதம்

செய்திப்பிரிவு

லக்னோ: ஐபிஎல் தொடரில் நேற்று முன்​தினம் லக்​னோ​வில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் - கொல்​கத்தா நைட் ரைடர்ஸ் அணி​கள் மோதின. இந்த ஆட்​டத்​தில் கொல்​கத்தா அணி சூப்​பர் ஓவரில் வெற்றி பெற்​றது.

முன்​ன​தாக கொல்​கத்தா அணி​யின் பேட்​டிங்​கின்போது 5-வது ஓவரில் அங்​கிரிஷ் ரகுவன்ஷி 9 ரன்​கள் எடுத்திருந்தபோது பீல்​டிங்​கிற்கு இடையூறு செய்​த​தாக ஆட்​ட​மிழக்​கச் செய்​யப்​பட்​டார். பிரின்ஸ் யாதவ் வீசிய இந்த ஓவரின் கடைசி பந்தை தட்​டி​விட்டு ரன்​கள் சேர்க்க அங்​கிரிஷ் ரகு​வன்ஷி ஓட முயன்​றார். பிட்ச்​சின் பாதிதூரத்தை அவர் கடந்த நிலை​யில் மறு​முனை​யில் நின்ற கேமரூன் கிரீன் வேண்​டாம் என மறுத்தார். இதனால் அங்​கிரிஷ் ரகு​வன்ஷி மீண்​டும் தனது கிரீஸுக்கு திரும்​புவதற்​காக ஓடி​னார்.

அப்​போது முகமது ஷமி பந்தை ஸ்டெம்பை நோக்கி வீசினார். அந்த பந்து அங்​கிரிஷ் ரகு​வன்ஷி மீது பட்​டது. இதனால் லக்னோ அணி அப்​பீல் செய்​தது. இதை ஆய்வு செய்த டி.​வி. நடு​வர், அங்​கிரிஷ் ரகு​வன்ஷி பீல்​டிங்​கிற்கு இடையூ செய்​த​தாக அவுட் கொடுத்​தார். இதனால் விரக்தியடைந்த அங்​கிரிஷ் ரகு​வன்ஷி மைதானத்தை விட்டு வெளி​யேறும்போது எல்​லைக் கோட்​டில் உள்ள குஷனை தனது பேட்​டி​னால் ஆக்​ரோஷ​மாகத் தாக்​கி​னார்.

அதனைத் தொடர்ந்​து, தனது ஹெல்​மெட்​டை​யும் வீரர்​கள் அமரும் இடத்​திற்கு நேராக வீசி எறிந்​தார். இது ஐபிஎல் நன்னடத்தை விதி 2.2-ஐ மீறிய செய​லாகும். இந்த விவகாரத்​தில் அங்​கிரிஷ் ரகு​வன்​ஷிக்கு போட்​டி​யின் ஊதியத்​தில் 20 சதவீதம் அபராதம் வி​திக்​கப்​பட்​டுள்​ளது. மேலும் ஒரு தகுதியிழப்பு புள்​ளி​யும் வழங்​கப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT