சாங்சோ: சீனாவின் சாங்சோ நகரில் சீன ஓபன் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் வென்ற இந்தியாவின் பி.வி.சிந்து, உலகத் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள சீனாவின் சென் யுஃபெயி-யை எதிர்த்து விளையாடினார்.ஒரு மணி நேரம் 30 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பி.வி.சிந்து 21-16, 20-22, 18-21 என்ற செட் கணக்கில் போராடி தோல்வி அடைந்தார்.