விளையாட்டு

ஆஸ்திரேலிய ஓபன் அரை இறுதியில் பி.வி.சிந்து

செய்திப்பிரிவு

சிட்னி: ஆஸ்திரேலிய ஓபன் பாட்மிண்டன் தொடரின் இந்தியாவின் பி.வி.சிந்து அரை இறுதி சுற்​றுக்கு முன்​னேறி​னார்.

ஆஸ்​திரேலி​யா​வின் சிட்னி நகரில் நடை​பெற்று வரும் இந்​தத் தொடரில் மகளிர் ஒற்​றையர் பிரிவு கால் இறுதி சுற்​றில் ஒலிம்பிக்கில் 2 முறை பதக்​கம் வென்ற இந்​தி​யா​வின் பி.​வி.சிந்​து, சீன தைபே​வின் சென் சு யு-வை எதிர்த்து விளை​யாடி​னார்.

ஒருதரப்பு ஆட்​ட​மாக வெறும் 27 நிமிடங்​களில் முடிவுக்கு இந்த மோதலில் சிந்து 21-6, 21-9 என்ற நேர் செட்​டில் வெற்றி பெற்று அரை இறு​திக்கு முன்​னேறி​னார். அரை இறுதி சுற்​றில் சிந்​து, போட்​டித் தரவரிசை​யில் முதலிடத்​தில் உள்ள ஜப்​பானின் அகானே யமகுச்​சி​யுடன் மோதுகிறார். அகானே யமகுச்சி கால் இறுதி சுற்​றில் 21-14, 21-14 என்ற செட் கணக்​கில் இந்​தி​யா​வின் தன்வி சர்​மாவை வீழ்த்​தி​னார். இந்த ஆட்​டம் 32 நிமிடங்​கள் நடைபெற்​றது.

SCROLL FOR NEXT