டோக்கியோ: ஜப்பான் ஓபன் பாட்மிண்டன் தொடர் டோக்கியோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் உலகத் தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள இந்தியாவின் பி.வி.சிந்து, 5-ம் நிலை வீராங்கனையான சீனாவின் ஹன் யி-யுடன் மோதினார்.
35 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிந்து 21-16, 21-14 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். கால் இறுதியில் சிந்து, ஜப்பானின் நவோமி ஒகுகராவுடன் மோதுகிறார்.