பஞ்​சாப் கிங்ஸ் வீரர்கள்

 
விளையாட்டு

பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி

செய்திப்பிரிவு

முலான்​பூர்: ஐபிஎல் தொடரில் நேற்று நியூ சண்​டிகரில் உள்ள முலான்​பூரில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் சன்ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் - பஞ்​சாப் கிங்ஸ் அணி​கள் மோதின. முதலில் பேட் செய்த ஹைத​ரா​பாத் அணி 6 விக்​கெட்​கள் இழப்​புக்கு 219 ரன்​கள் குவித்​தது. தொடக்க வீர​ரான அபிஷேக் சர்மா 28 பந்​துகளில், 8 சிக்​ஸர்​கள், 5 பவுண்​டரி​களு​டன் 74 ரன்​கள் விளாசி​னார்.

மற்​றொரு தொடக்க வீர​ரான டிரா​விஸ் ஹெட் 23 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 5 பவுண்​டரி​களு​டன் 38 ரன்​கள் சேர்த்​தார். அபிஷேக் சர்​மா​வின் அதிரடி​யால் ஹைத​ரா​பாத் அணி 5.5 ஓவர்​களி​லேயே 100 ரன்​களை குவித்​தது.

          

முதல் விக்​கெட்​டுக்கு அபிஷேக் சர்​மா, டிரா​விஸ் ஹெட் ஜோடி 49 பந்​துகளில் 120 ரன்​களை வேட்​டை​யாடியது. கடும் அச்​சுறுத்​தல் கொடுத்த இந்த ஜோடியை 9-வது ஓவரை வீசிய ஷசாங் சிங் சீரான இடைவெளி​யில் வெளி​யேற்​றி​னார்.

இஷான் கிஷன் 27, ஹெய்ன்​ரிச் கிளாசன் 39, அங்​கித் வர்மா 18, சலில் அரோரா 9 ரன்​களில் நடையை கட்​டினர். முதல் 8 ஓவர்​களில் 120 ரன்​களை குவித்த ஹைத​ரா​பாத் அணி​யில் அடுத்த 12 ஓவர்​களில் 99 ரன்​களை மட்​டுமே எடுக்க முடிந்​தது. பஞ்​சாப் அணி தரப்​பில் ஷசாங் சிங் 3 ஓவர்​களை வீசி 20 ரன்​களை வழங்கி 2 விக்​கெட்​களை கைப்​பற்​றி​னார். அர்​ஷ்தீப் சிங் 4 ஓவர்​களை வீசி 50 ரன்​களை தாரை​வார்த்து 2 விக்​கெட்​களை வீழ்த்​தி​னார்.

220 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த பஞ்​சாப் கிங்ஸ் அணி 18.5 ஓவர்​களில் 4 விக்​கெட்​கள் இழப்​புக்கு 223 ரன்​கள் எடுத்து வெற்றி பெற்​றது. கேப்​டன் ஸ்ரேயஸ் ஐயர் 33 பந்​துகளில், 5 சிக்​ஸர்​கள், 5 பவுண்​டரி​களு​டன் 69 ரன்​கள் விளாசி ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தார். முன்​ன​தாக தொடக்க வீரர்​களான பிரியன்ஷ் ஆர்யா 20 பந்​துகளில், 5 சிக்​ஸர்​கள், 5 பவுண்​டரி​களு​டன் 57 ரன்​களும், பிரப்​சிம்​ரன் சிங் 25 பந்​துகளில், 4 சிக்​ஸர்​கள், 4 பவுண்​டரி​களு​டன் 51 ரன்​களும் விளாசி ஆட்​ட​மிழந்​தனர்.

இந்த ஜோடி முதல் விக்​கெட்​டுக்கு 6.2 ஓவர்​களில் 99 ரன்​கள் குவித்​திருந்​தது. 6 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற பஞ்​சாப் கிங்ஸ் அணிக்கு இது 3-வது வெற்​றி​யாக அமைந்​தது. 4 ஆட்​டங்​களில் விளை​யாடி உள்ள அந்த அணி 7 புள்​ளி​களு​டன் 2-வது இடத்​தில் உள்​ளது. ஹைத​ரா​பாத்​ அணிக்​கு இது 3-வது தோல்​வி​யாக அமைந்​தது. 4 ஆட்​டங்​களில்​ விளை​யாடி உள்​ள அந்​த அணி 2 புள்​ளி​களு​டன்​ பட்​டியலில்​ 6-வது இடத்​தில்​ உள்​ளது.

SCROLL FOR NEXT