சாங்சோ: சீனாவின் சாங்சோ நகரில் சீனா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் தேவிகா ஷிஹாக், உலகத் தரவரிசையில் 20-வது இடத்தில் உள்ள தாய்லாந்தின் புசானன் ஓங்பம்ருங்பானுடன் மோதினார்.
இதில் தேவிகா சிஹாக் 19-21, 21-19, 13-21 என்ற செட் கணக்கில் போராடி தோல்வி அடைந்தார். ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரனாய், மலேசியாவின் லியோங்க் ஜுன் ஹாவுடன் மோதினார். இதில் பிரனாய் 10-21, 14-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.