கனிஸா: ஹங்கேரியின் கனிஸா நகரில் கனிஸா ஓபன் செஸ் தொடர் நடைபெற்றது. இதன் 9-வது மற்றும் கடைசி சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டரான எம்.பிரனேஷ், ஜெர்மனியின் வாதிம் பெட்ரோவ்ஸ்கியுடன் மோதினார்.
இதில் வெள்ளை காய்களுடன் விளையாடிய பிரனேஷ் 36-வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார்.
இந்தத் தொடரில் 7 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து பிரனேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். 19 வயதான பிரனேஷ், தமிழ்நாட்டின் காரைக்குடி பகுதியை சேர்ந்தவர். ஃபிடே உலக தரவரிசையில் 2,673 ரேட்டிங் புள்ளிகளுடன் பிரனேஷ் 44-வது இடம் வகிக்கிறார்.