விளையாட்டு

கோல்ஃப் போட்டியில் பிரணவி தங்கம் வென்று சாதனை @ ஆசிய விளையாட்டு போட்டி

செய்திப்பிரிவு

ஆசிய விளை​யாட்டு போட்​டி​யின் கோல்ஃப் பிரிவில் இந்​திய வீராங்​க​னை​யான பிரணவி அர்ஸ் தங்​கப் பதக்​கம் வென்​றார். இதன் மூலம் அவர், ஆசிய விளை​யாட்டு வரலாற்​றில் கோல்ஃப் போட்​டி​யில் தங்​கப் பதக்​கம் வென்ற முதல் இந்​திய வீராங்​கனை என்ற வரலாற்று சாதனை படைத்​தார்.

மைசூருவைச் சேர்ந்த 23 வயதான பிரண​வி, மூன்​றாவது துளை​யில் எதிர்​பா​ராத வித​மாக மூன்று போகி அடித்​துச் சிரமப்​பட்​டார். இதனால் தனது முந்​தைய நாள் 3 ஸ்டோக் முன்​னிலையை இழந்த அவர், அதிலிருந்து மீண்​டுவர 3 பர்​டிகளை பதிவு செய்​தார்.

இறு​திச் சுற்​றில் ஈவன்​-​பார் 70 ஸ்கோருடன், நான்கு நாட்​களில் மொத்​தம் 15-அண்​டர் 265 என்ற கணக்​கில் போட்​டியை நிறைவு செய்​து, மற்ற போட்​டி​யாளர்​களை விட ஒரு ஸ்டோக் முன்​னிலை​யில் முதலிடம் பிடித்து தங்​கப் பதக்​கம் வென்​றார் பிரணவி அர்​ஸ்.

அதே வேளை​யில் அணி​கள் பிரி​வில் இந்​தியா வெள்​ளிப் பதக்​கம் வென்​றது. இதில் இறு​திச் சுற்​றில் 6, 10 மற்​றும் 13-வது துளை​களில் பிரணவி பர்​டிகளைப் பதிவு செய்​தது முக்​கியக் காரண​மாக அமைந்​தது. இந்​திய அணி​யில் அதிதி அசோக், தீக் ஷா தாகர் ஆகியோ​ரும் இடம் பெற்​றிருந்​தனர். கடந்த முறை நடை​பெற்ற ஆசிய விளை​யாட்​டுப் போட்​டிகளில் தனி​நபர் பிரி​வில் வெள்​ளிப் பதக்​கம் வென்ற அதிதி அசோக், தொடர்ச்​சி​யாக 5 பர்​டிகளை அடித்​து, ஒரு டபுள் போகி மற்​றும் ஒரு போகி ஆகிய​வற்​றுடன் தனது ஆட்​டத்தை முடித்​துக்​கொண்​டார்.

தனி​நபர் பிரி​வில் அதிதி அசோக் ஒட்​டுமொத்​த​மாக 282 புள்​ளி​களு​டன் 14-வது இடத்​தைப் பகிர்ந்து கொண்​டார். தீக்‌ஷா 23-வது இடத்​தைப் பகிர்ந்து கொண்​டார். அணிப் பதக்​கங்​களைத் தீர்​மானிக்க இரண்டு சிறந்த வீராங்​க​னை​களின் புள்​ளி​கள் கணக்​கில் எடுத்​துக்​கொள்​ளப்​படும். அதன்​படி இந்​தியா 546 புள்​ளி​களு​டன் நிறைவு செய்​து 2-வது இடம்​ பிடித்த​து.

SCROLL FOR NEXT