பிரக்ஞானந்தா
செயின்ட் லூயிஸ்: அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் கிளப் சார்பில் ரேபிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் போட்டியில் பட்டம் வென்றார் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா. ஒரு சுற்று எஞ்சியிருந்த நிலையில் பட்டத்தை அவர் உறுதி செய்தது குறிப்பிடத்தக்கது.
20 வயதான பிரக்ஞானந்தா, மொத்தம் 23.5 புள்ளிகளை பெற்று சாம்பியன் ஆனார். இதில் ரேபிட் பிரிவில் 12, பிளிட்ஸ் பிரிவில் 11.5 புள்ளிகளை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. உஸ்பெகிஸ்தானின் ஜாவோகிர் சிந்தரோவ், இதில் இரண்டாம் இடம் பிடித்தார்.
இந்த வெற்றியின் மூலம் நடப்பு ஆண்டின் பிற்பகுதியில் நடைபெறவுள்ள கிராண்ட் செஸ் டூர் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும் வாய்ப்பை பிரக்ஞானந்தா தக்கவைத்துக் கொண்டுள்ளார். செயின்ட் லூயிஸ் கிளப் செஸ் போட்டியில் முதலிடம் பிடித்ததன் மூலம் 50,000 டாலர்களை( சுமார் ரூ.47.62 லட்சம்) பரிசாக பெற்றார். இறுதி சுற்று வரை ஜாவோகிர் சிந்தரோவ் தனக்கு கடும் சவால் கொடுத்ததாக வெற்றிக்கு பிறகு பிரக்ஞானந்தா தெரிவித்தார்.
கிராண்ட் செஸ் டூர் தொடரின் கடைசி போட்டியாக சின்க்பீல்ட் கோப்பை நடைபெற உள்ளது. இதில் பிரக்ஞானந்தா பங்கேற்கிறார். இந்தப் போட்டி வரும் 10-ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடர் கிளாசிக்கல் பிரிவில் நடைபெற உள்ளது.
முன்னதாக, கடந்த ஜூன் மாதம் நார்வே செஸ் போட்டியில் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை பிரக்ஞானந்தா படைத்தார். அந்த தொடரில் அவர், கார்ல்சனை வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.