விளையாட்டு

2-வது ஆட்டத்தை டிரா செய்தார் பிரக்ஞானந்தா

செய்திப்பிரிவு

செயின்ட் லூயிஸ்: கிராண்ட் செஸ் டூர் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா - அமெரிக்காவின் பேபியானோ கருனா மோதி வருகின்றனர். 2 ஆட்டங்கள் கொண்ட கிளாசிக் போட்டியில் முதல் ஆட்டத்தில் பேபியானோ கருனா வெற்றி பெற்றிருந்தார்.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற 2-வது ஆட்டத்தை 95-வது நகர்த்தலின் போது பிரக்ஞானந்தா டிரா செய்தார்.

இதனால் பிரக்ஞானந்தா 3-9 என பின்தங்கி உள்ளார். கிளாசிக்கல் போட்டியை தொடர்ந்து இருவரும் ரேப்பிடு மற்றும் பிளிட்ஸ் போட்டிகளில் மோத உள்ளனர்.

SCROLL FOR NEXT