இந்திய செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா

 
விளையாட்டு

நார்வே செஸ் போட்டியில் பட்டம் வென்று பிரக்ஞானந்தா சாதனை

வேட்டையன்

ஒஸ்லோ: நார்வே செஸ் போட்டியில் பட்டம் வென்றார் இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா. இதன் மூலம் இந்த பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

நார்வே நாட்​டின் ஒஸ்லோ நகரில் நார்வே செஸ் போட்டி நடை​பெற்றது. 6 வீரர்​கள் கலந்து கொண்​ட இந்த தொடரின் 10-வது மற்றும் இறுதி சுற்​றில் ஜெர்மனி நாட்டின் வின்சென்ட் கீமரை பிரக்ஞானந்தா வீழ்த்தினார். இதன் மூலம் மொத்தம் 18 புள்ளிகளை பெற்று அவர் பட்டம் வென்றார். அமெரிக்காவின் வெஸ்லி 17 புள்ளிகளுடன் இரண்டாம் இடம் பிடித்தார்.

20 வயதான பிரக்ஞானந்தா தொடர்ச்சியாக நான்கு கிளாசிக் பிரிவு ஆட்டத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இறுதி சுற்று ஆட்டத்துக்கு முன்னதாக நடைபெற்ற 9 சுற்​றுகளின் முடி​வில் அமெரிக்​கா​வின் வெஸ்லி சோ 15.5 புள்​ளி​களு​டன் முதலிடத்​தில் இருந்தார். பிரக்​ஞானந்தா 15 புள்​ளி​களு​டன் 2-வது இடத்தில் இருந்தார். பிரான்​ஸின் அலிரேசா ஃபிரோஸ்ஜா 14.5 புள்​ளி​களு​டன் 3-வது இடத்​தில் இருந்தார்.

இதனால் வெஸ்லி சோ, பிரக்​ஞானந்​தா, அலிரேசா ஃபிரோஸ்ஜா ஆகியோரில் யாரேனும் ஒருவர் பட்​டம் வெல்லும் வாய்ப்பு இருந்தது. இந்நிலையில், வெஸ்லி சோ, அலிரேசா ஃபிரோஸ்​ஜா இடையிலான ஆட்டம் டிரா ஆனது. அதனால் அதிக புள்ளிகள் பெற்ற பிரக்​ஞானந்​தா பட்டம் வென்றார்.

இறுதி சுற்றின் முடிவில் பிரக்​ஞானந்​தா 18 புள்ளிகள், வெஸ்லி 17 புள்ளிகள், அலிரேசா ஃபிரோஸ்ஜா 15.5 புள்ளிகள், கார்ல்சன் 13 புள்ளிகள், வின்சென்ட் கீமார் 11 புள்ளிகள், டி.குகேஷ் 8 புள்ளிகள் பெற்றிருந்தனர்.

SCROLL FOR NEXT