தோனி, சஞ்சு சாம்சன்

 
விளையாட்டு

IPL 2026 | “தோனி உடன் விளையாடுவது உற்சாகம்” - சஞ்சு சாம்சன்

வேட்டையன்

திருவனந்தபுரம்: விரைவில் தொடங்கவுள்ள ஐபிஎல் 2026 சீசனில் தனது கவனத்தை முழுவதுமாக வைத்துள்ளார் நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் தொடர் நாயகன் விருதை வென்றவர் சஞ்சு சாம்சன். இந்த சீசனில் முதன்முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அவர் விளையாட உள்ளார். அது குறித்து அவர் கூறியதாவது:

“டி20 உலகக் கோப்பையை வென்றது எனது கிரிக்கெட் கரியரில் முக்கியமான தருணம். ஆனால், இப்போது எனது கவனம் ஐபிஎல் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதில் உள்ளது. இந்த முறை புதிய அணியுடன் இணைத்துள்ளேன். என்னுடைய சிறந்த ஆட்டத்தை அவர்களுக்கு வெளிப்படுத்த விரும்புகிறேன்.

          

சிஎஸ்கே அணியில் இணைவதும், தோனி உடன் விளையாடுவதும் எனக்கு உற்சாகம் தருகிறது. அவருடன் போனில் பேசினேன். இந்திய அணியில் அவருடன் டிரெஸ்ஸிங் ரூமை பகிர்ந்து கொண்ட அனுபவம் எனக்கு உள்ளது. அவருடன் பேசும்போதெல்லாம் நான் பாசிட்டிவாக உணர்வேன். இந்த முறை இரண்டு மாதங்கள் அவருடன் பயணிக்க உள்ளேன். இது முற்றிலும் மாறுபட்ட ஒரு அனுபவமாக இருக்கும். அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்வேன். அதை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளேன்.

சென்னை மக்கள் என்னை அவர்களில் ஒருவராக பார்க்கிறார். உலகக் கோப்பை தொடரின்போது எனக்கு சென்னையில் கிடைத்த ஆதரவு எனக்கே சர்ப்ரைஸ் தந்தது. நிச்சயம் அவர்களை ஏமாற்ற மாட்டேன். சிஎஸ்கே அணிக்காக எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவேன்” என்றார்.

31 வயதான சஞ்சு சாம்சன், கடந்த 2013 முதல் 177 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி உள்ளார். டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி, 4,704 ரன்கள் எடுத்துள்ளார். 3 சதம், 26 அரை சதங்கள் இதில் அடங்கும். அவரது ஸ்ட்ரைக் ரேட் 139. பேட்டிங் சராசரி 31 என உள்ளது.

SCROLL FOR NEXT