விளையாட்டு

பிக் பாஷ் லீக் கிரிக்கெட்: பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் சாம்பியன்

செய்திப்பிரிவு

பெர்த்: பிக் பாஷ் லீக் கிரிக்​கெட்​ (பிபிஎல்) போட்​டி​யில் பெர்த் ஸ்கார்ச்​சர்ஸ் அணி சாம்​பியன் பட்​டத்​தைக் கைப்​பற்​றியது.

ஆஸ்​திரேலி​யா​வில் கடந்த 2 மாதங்​களாக பிபிஎல் லீக் போட்​டிகள் நடை​பெற்று வந்​தன. இந்​நிலை​யில் இறு​திப் போட்​டிக்கு பெர்த் ஸ்கார்ச்​சர்​ஸ், சிட்னி சிக்​ஸர்ஸ் அணி​கள் முன்​னேறின.

          

இந்​நிலை​யில் நேற்று பெர்த் மைதானத்​தில் நடை​பெற்ற இறு​திப் போட்​டி​யில் பெர்த் ஸ்கார்ச்​சர்ஸ் அணி 6 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் சிட்னி சிக்​ஸர்ஸ் அணியை வீழ்த்தி சாம்​பியன் பட்​டத்தை வென்​றது. பிபிஎல் போட்​டி​யில் 6-வது முறை​யாக சாம்​பியன் பட்​டத்தை வென்​றது பெர்த் ஸ்கார்ச்​சர்ஸ் அணி.

முதலில் பேட்​டிங் செய்த சிட்னி சிக்​ஸர்ஸ் அணி 20 ஓவர்​களில் 132 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. பின்​னர் 133 ரன்​கள் எடுத்​தால் வெற்றி என்ற இலக்​குடன் விளை​யாடிய பெர்த் ஸ்கார்ச்​சர்ஸ் அணி 17.3 ஓவர்​களில் 4 விக்​கெட் இழப்​புக்கு 133 ரன்​கள் சேர்த்​து வெற்​றி கண்​டது.

SCROLL FOR NEXT