விளையாட்டு

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்த அனுமதி

செய்திப்பிரிவு

பெங்களூரு: ஐபிஎல் 2026-ம் ஆண்டு சீசனுக்​கான போட்டிகளை பெங்​களூரு எம்​.சின்னசாமி மைதானத்​தில் நடத்​திக் கொள்ள கர்​நாடக கிரிக்​கெட் சங்​கம் மற்​றும் ராயல் சாலஞ்​சர்ஸ் பெங்​களூரு (ஆர்​சிபி) அணிக்கு அனுமதி வழங்கி உத்​தர​விட்​டுள்​ளது கர்​நாடக மாநில அரசு.

ஐபிஎல் 19-வது சீசன் போட்​டிகள் வரும் 28-ம் தேதி கோலாகல​மாக தொடங்​கு​கிறது. இதன் தொடக்க ஆட்​டத்​தில் நடப்பு சாம்​பிய​னான ராயல் சாலஞ்​சர்ஸ் பெங்​களூரு, 2016-ம் ஆண்டு சாம்​பிய​னான சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணி​யுடன் மோதுகிறது. இந்த ஆட்​டம் பெங்​களூரு எம்​.சின்​ன​சாமி மைதானத்​தில் நடை​பெறும் என ஏற்​கெனவே அறிவிக்​கப்​பட்​டிருந்​தது.

          

எனினும் பெங்​களூரு​வில் நடை​பெற​விருக்​கும் ஐபிஎல் போட்​டிகள், கர்​நாடக அரசால் அமைக்​கப்​பட்ட நிபுணர் குழு​வின் ஒப்​புதலுக்கு உட்​பட்​டவை என பிசிசிஐ தெரி​வித்​திருந்​தது. கடந்த ஆண்டு ஆர்​சிபி அணி முதன்​முறை​யாக சாம்​பியன் பட்​டம் வென்​றதை தொடர்ந்து நடை​பெற்ற வெற்றி கொண்​டாட்​டத்​தில் ஏற்​பட்ட நெரிசலில் 11 பேர் உயி​ரிழந்​திருந்​தனர். இதன் பின்​னர் மைதானத்​தில் சர்​வ​தேச தரத்​திலான பாது​காப்பு வசதி​கள் மேம்​படுத்​தப்​படும் வரை அங்கு போட்​டிகள் நடத்த கர்​நாடக அரசு தற்​காலிக தடை விதித்​திருந்​தது.

இதனால் ஆர்​சிபி அணி​யின் போட்​டிகள் மீண்​டும் பெங்​களூரு​வில் நடத்​தப்​படு​மா? அல்​லது வேறு மைதானத்​துக்கு மாற்​றப்​படு​மா? என்ற சந்​தேகங்​கள் எழுந்​தன. இதற்​கிடையே ஆர்​சிபி அணி நிர்​வாகம் மாற்று ஏற்​பா​டாக ராய்ப்​பூரில் உள்ள ஷாஹீத் வீர் நாராயண் சிங் சர்​வ​தேச கிரிக்​கெட் மைதானத்​தில் போட்​டிகளை நடத்​து​வதற்​கான ஏற்​பாடு​களை முன்​னெடுத்​தது.

இதுஒரு​புறம் இருக்க கர்​நாடக கிரிக்​கெட் சங்​க​மும், ஆர்​சிபி அணி​யும் ஐபிஎல் போட்​டிகளின் போது சின்​ன​சாமி மைதானத்​தில் உயர்​மட்ட அளவி​லான பாது​காப்​பு​களை வழங்​கு​வதற்​கும், ரசிகர்​களுக்கு கூடு​தல் வசதி​களை ஏற்​படுத்​திக் கொடுக்​க​வும் முன்​வந்​தன. இதையடுத்து மைதானத்​தில் செய்​யப்​பட்​டுள்ள கூடு​தல் பாது​காப்பு அம்​சங்​களை கர்​நாடக அரசு நியமித்த நிபுணர்​குழு கடந்த 13-ம் தேதி ஆய்வு செய்​தது.

அப்​போது போட்டி நடை​பெறும் நாளன்று செய்​யப்​படும் அனைத்து ஏற்​பாடு​களும் ஒரு முழு அளவி​லான ஒத்​திகை மூலம் செய்து காண்​பிக்​கப்​பட்​டது. இதைத் தொடர்ந்து இதுதொடர்​பான விரி​வான அறிக்​கையை நிபுணர் குழு, கர்​நாடக அரசிடம் வழங்​கியது. இந்​நிலை​யில் கர்​நாடக உள்​துறை அமைச்​சர் பரமேஸ்​வரா தலை​மை​யில் ஆலோ​சனை கூட்​டம் நடை​பெற்​றது.

இதில், மாநில அரசால் அமைக்​கப்​பட்ட நிபுணர் குழு, கர்​நாடக மாநில கிரிக்​கெட் சங்க நிர்​வாகி​கள், ஆர்​சிபி அணி நிர்​வாகி​கள் மற்​றும் அந்த அணி​யின் நிகழ்ச்​சிகளை நடத்​தும் நிறு​வனத்​தின் அதி​காரி​களும் பங்​கேற்​றனர். இந்த கூட்​டத்​துக்கு பிறகு சின்​னசாமி மைதானத்​தில் ஐபிஎல் போட்​டிகளை நடத்த அதி​காரப்​பூர்​வ​மாக அனு​மதி வழங்​கப்​பட்​டது.

என்​னென்ன மாற்​றங்​கள்​?

கூட்ட நெரிசலைத் தவிர்க்க 6 புதிய நுழைவு வாயில்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. ஏற்​கெனவே இருந்த வாயில்​கள் மற்​றும் நடை​பாதைகள் 6 மீட்​டர் அளவுக்கு விரி​வாக்​கப்​ பட்​டுள்​ளன. மைதானத்​துக்கு வெளியே சுமார் 5,000 பேர் வரை காத்​திருக்​கக்​கூடிய பிரத்​யேகப் பகு​தி​கள் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளன.

டிக்​கெட் கவுண்​டர்​களில் நெரிசலைத் தவிர்க்க டிஜிட்​டல் டிக்​கெட் முறை கட்​டாய​மாக்​கப்​பட்​டுள்​ளது. டிஜிட்​டல் முறை​யில் க்யூஆர் கோடு ஸ்கேன் செய்து மைதானத்​துக்​குள் நேரடி​யாக உள்ளே நுழைய​லாம்.

மைதானத்​தைச் சுற்​றி​லும் கூடு​தல் ஏ.ஐ. தொழில்​நுட்​பத்​துடன் கூடிய சிசிடிவி கேம​ராக்​கள் மற்​றும் நவீன ஸ்கேனிங் கருவி​கள் பொருத்​தப்​பட்​டுள்​ளன. பெண்​கள் மற்​றும் குழந்​தைகளுக்கு என பிரத்​யேக வரிசைகள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. மேல் வரிசை இருக்​கைகளுக்கு செல்​லும் ரசிகர்​கள்​ எளி​தாக ஏறி இறங்​க புதி​ய சரிவுப்​ பாதைகள்​ கட்​டப்​பட்​டுள்ளன.

SCROLL FOR NEXT