விளையாட்டு

அமைச்சர் எல்.முருகன் வீட்டில் பொங்கல் விழா: பராசக்தி படக் குழுவினர் பங்கேற்பு

ஆர்.ஷபிமுன்னா

நடிகர்​கள் சிவ​கார்த்​தி​கேயன், ரவி மோகன் நடித்​துள்ள ‘பராசக்​தி’ திரைப்​படம் தமிழகத்​தில் வெளி​யிடப்​பட்​டுள்​ளது. இந்​தப் படத்​துக்கு ஜி.​வி.பிர​காஷ் இசையமைத்​துள்​ளார். இந்தி திணிப்​புக்கு எதி​ரான போராட்​டங்​களை கரு​வாக வைத்து இந்தப் படம் எடுக்​கப்​பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில், டெல்லியில் உள்ள மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன் இல்​லத்​தில் நடை​பெற்ற பொங்​கல் விழா​வில், சிவ​கார்த்​தி​கேயன், ரவிமோகன், ஜி.​வி.பிர​காஷ் ஆகியோர் பங்​கேற்​றனர்.

மேலும், ஜி.​வி.பிர​காஷின் இசை நிகழ்ச்​சி​யும் நடை​பெற்​றது. அப்​போது அவர் பாடிய பக்தி பாடல்​களை பிரதமர் மோடி, பாஜக தலை​வர்​கள், அதி​காரி​கள் மற்​றும் பல்​வேறு சமூகங்​களை சேர்ந்​தவர்​கள் கேட்டு மகிழ்ந்​தனர். பராசக்தி குழு​வினர் பிரதமர் மோடியை சந்​தித்து பேசினர்.

இதுகுறித்து சிவ​கார்த்​தி​கேயன் கூறும்​போது, ‘‘பிரதமர் மோடியை சந்​திப்​பது எப்​போதும் பெரு​மை​யாக​வும், மகிழ்ச்​சியாகவும் இருக்​கும். டெல்​லி​யில் நடை​பெறும் பொங்​கல் விழா, இந்த நாட்​டின் ஒற்​றுமைக்​கான தகவலாக இருக்​கும்’’ என்​றார்.

ரவி மோகன் கூறும்​போது, ‘‘பிரதமர் மோடி​யின் ஆளுமை மிக​வும் ஈர்க்​கும். எங்​களை அவர் சிரித்​துக் கொண்டே வரவேற்று வாழ்த்​தி​னார். பிரதமர் மோடி பங்​கேற்​கும் இந்த பொங்கல் விழா​வில் கலந்து கொள்ள பராசக்தி திரைப்பட குழுவினருக்கு அழைப்புவிடுத்த அமைச்​சர் எல்​.​முரு​க​னுக்கு நன்றி’’ என்​றார்.

SCROLL FOR NEXT