விளையாட்டு

பாகிஸ்தான் வீரர் சப்ராஸ் அகமது ஓய்வு

செய்திப்பிரிவு

இஸ்​லா​மா​பாத்: அனைத்து வடிவி​லான கிரிக்​கெட்​டில் இருந்​தும் ஓய்வு பெறு​வ​தாக பாகிஸ்​தான் அணி​யின் முன்​னாள் கேப்​ட​னும், விக்​கெட் கீப்​பர் பேட்​ஸ்​மேனு​மான சப்ராஸ் அகமது அறி​வித்​துள்​ளார். இவர் கடந்த 2023-ம் ஆண்டு பெர்த்​தில் ஆஸ்​திரேலி​யா​வுக்கு எதி​ராக நடை​பெற்ற டெஸ்ட் போட்​டி​யில் பாகிஸ்​தான் அணிக்​காக கடைசி​யாக விளை​யாடி​யிருந்​தார்.

இவரது தலை​மை​யில் பாகிஸ்​தான் அணி 2 ஐசிசி கோப்​பைகளை வென்​றுள்​ளது. இந்​நிலை​யில் நேற்று அனைத்து வடிவி​லான கிரிக்​கெட் போட்​டிகளில் இருந்​தும் ஓய்வு பெறு​வ​தாக சர்​ப​ராஸ் அகமது அறி​வித்​துள்​ளார். இவர், பாகிஸ்​தான் அணி​யின் தலைமை பயிற்​சி​யாள​ராக அதி​காரப்​பூர்​வ​மாக விரை​வில் அறிவிக்​கப்பட உள்​ள​தாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது.

          
SCROLL FOR NEXT