விளையாட்டு

முன்னிலை பெற்றது பாகிஸ்தான் அணி | ராவல்பிண்டி டெஸ்ட்

செய்திப்பிரிவு

ராவல்பிண்டி: பாகிஸ்​தான் - இலங்கை அணிகள் இடை​யி​லான 2-வது டெஸ்ட் கிரிக்​கெட் போட்டி ராவல்​பிண்​டி​யில் நடை​பெற்று வரு​கிறது. இதன் முதல் இன்​னிங்​ஸில் இலங்கை அணி 22 ஓவர்​களில் 98 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது.

இதையடுத்து விளை​யாடிய பாகிஸ்​தான் அணி நேற்​றைய 2-வது நாள் ஆட்​டத்​தில் 87.5 ஓவர்​களில் 325 ரன்​கள் குவித்து ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக காஸி ஹோரி 54 ரன்​கள் சேர்த்​தார்.

இலங்கை அணி தரப்​பில் லகிரு குமரா 5 விக்​கெட்​களை வீழ்த்​தினார். 123 ரன்​கள் பின்​தங்​கிய நிலை​யில் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய இலங்கை அணி 2-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 22 ஓவர்​களில் 3 விக்​கெட்​கள் இழப்​புக்கு 74 ரன்​கள் எடுத்​தது. லகிரு உதரா 7, தினேஷ் சந்​தி​மால் 0, கமிந்து மெண்​டிஸ் 16 ரன்​களில் ஆட்​ட​மிழந்​தனர். பசிந்து சூரியபண்​டரா 18, தனஞ்​ஜெயா டி சில்வா 24 ரன்​களு​டன் களத்​தில் இருந்​தனர். 3-வது நாள் ஆட்​டம் இன்று நடை​பெறுகிறது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT