விளையாட்டு

வீரர்களிடம் ரூ.10 லட்சம் கேட்கும் பாக். வாரியம்

செய்திப்பிரிவு

அபுதாபி: அபுதாபி டி10 கிரிக்கெட் லீக் அங்குள்ள ஜயத் கிரிக்கெட் மைதானத்தில் நாளை (7-ம் தேதி) தொடங்குகிறது. இந்தத் தொடரில் 6 அணிகள் பங்கேற்கின்றன. இந்த அணிகளில் பாகிஸ்தானை சேர்ந்த 15 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் வெளிநாடுகளில் நடைபெறும் தொழில்முறை டி20 மற்றும் டி10 லீக் போட்டிகளில் பங்கேற்க பாகிஸ்தான் வீரர்களுக்கு தடையில்லாச் சான்றிதழ் (என்ஓசி) வழங்க, ஒரு வீரருக்கு சுமார் ரூ.10 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நிபந்தனை விதித்துள்ளது.

என்ஓசி கோரி செப்டம்பர் மாத இறுதியிலேயே விண்ணப்பித்திருந்த நிலையில், சில நாட்களுக்கு முன்புதான் கட்டணம் குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டதாக லீக்கில் பங்கேற்கும் அணி நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் நடைபெறும் மேஜர் லீக் கிரிக்கெட், ஐக்கிய அரபு அமீரகத்தின் இன்டர்நேஷனல் டி20 லீக் உள்ளிட்ட தொடர்களிலும் பங்கேற்கும் பாகிஸ்தான் வீரர்களுக்கு என்.ஓ.சி. வழங்க ஒரு வீரருக்கு 25,000 அமெரிக்க டாலர் கட்டணத்தை பிசிபி கோரி வருகிறது. இதனால், பாகிஸ்தான் வீரர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT